scorecardresearch
Friday, 6 February, 2026
முகப்புபுத்தகம்ஈ எம் ஃபார்ஸ்டரின் “எ பேசேஜ் டு இந்தியா” ஒரு புனைக்கதையாக வாசியுங்கள். வரலாற்று சுவடுகளை...

ஈ எம் ஃபார்ஸ்டரின் “எ பேசேஜ் டு இந்தியா” ஒரு புனைக்கதையாக வாசியுங்கள். வரலாற்று சுவடுகளை தேடாதீர்கள்

ஓரியண்ட் பிளாக்ஸ்வானின் ‘100 இயர்ஸ் ஆஃப் எ பேசேஜ் டு இந்தியா,’ அப்புதினத்தின் சூழல், கருப்பொருட்கள் மற்றும் பாத்திரங்களை சமகால கண்ணோட்டதில் சீராய்கின்றது.

பல்வேறு முகமூடிகளுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் மதநோக்கமே இப்புதினத்தின் மையப்பொருள். புத்தகத்தில், இஸ்லாம், கிரிஸ்தவம் மற்றும் இந்து மதங்களைத்தாண்டி, குகைகளின் எதிரொலிகளுக்கு  திருமதி மூரின் நாசகார வெளிப்பாட்டிற்கு அந்யோண்யமாக மதம் உருவகப்பதுத்தப்பதுகிறது. இது  ஃபார்ஸ்டரின் சொந்த எண்ணங்களை பிரதிபலிப்பதாகவோ அன்றேல் மறுதலிப்பதாகவோ அமைந்திருந்தாலும் அவரது பிற்கால எழுத்துக்களில் காணும் மனிதநேயச்சோர்விற்கு மாறாகவுள்ளது.

கிறிஸ்துவரான திருமதி மூர், பிரபஞ்சத்தின் பயங்கரமும் அதன் எளிமையும் ஒரே சமயத்தில் தெரியும் என்ற உண்மையை ஒருசேர குகையில் உணர்கிறார். காலனித்துவ கொடுமையால் தூர்ந்துபோன இன்னொரு கண்டத்தில், கான்ராட்டின் தி ஹார்ட் ஆஃப் டார்க்னஸ் (1899) நாவலின் உள்ளார்ந்த அர்த்தங்களை பார்த்து, க்ரூட்ஸ், மூச்சுவிடமுடியாத அழுத்ததில் கண்ணீர் சொரிகின்றார். ‘பயங்கரம்! பயங்கரம்!’

எ பேசேஜ் டு இந்தியா பலவாறு ஒப்பிநோக்கலாம், என்றாலும் அதனை ஒரு புனைக்கதையாக படிப்பதே உசிதமானது. புதினத்தின் பாத்திரங்கள் பொதுவாக பிற்போக்கு எண்ணங்களை பிரதிபலிக்கின்றன, இது இருவகைபரிமாணங்ளை பரிந்துரைக்கின்றது. சக்தியோடிருந்தால், இந்தியாவில் பிரித்தானிய ஏகதிபத்ய சூரியனின் தொய்வு நிலையும், இந்திய தேசியவாத வளர்ச்சியும் அது விவரிக்கின்றது.

உண்மையில், ஃபோர்ஸ்டரின் புனைகதைகளில் கிட்டத்தட்ட பங்கு கதாபாத்திரங்களின் உணர்வு உள்ளது, சில நேரங்களில் விரிவாக விவரிக்கப்படுகிறது, இதனால் திருமதி மூர், எடுத்துக்காட்டாக, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட ‘தி எடர்னல் மொமெண்ட்’ என்ற சிறுகதையில் மிஸ் ராபியுடன் சில ஒற்றுமையைக் கொண்டுள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட எட்வர்டின் தாம்சனின் ஃபேர்வெல் டு இந்தியா (1931) எனும் புதினம், ஃபோர்ஸ்டரின் புனைக்கதைக்கு தெளிவான ஒர் முரண் எதிரொலி. ஃபேர்வெல் டு இந்தியா படைப்பு பிரித்தானிய பேரரசின் அந்திமக்காலம் பற்றிய செறிந்த அறிவுடன் எழுதப்பட்டதால் அது ஒப்பீட்டளவில் சுவாரஸ்யம் குறைந்த சிக்கலான பாத்திரங்களடங்கியிருந்தாலும் பூரணமானதாக கருதப்பதுகிறது. சமகால எழுத்தாளர் பூபால் சிங்  தாம்சனை பற்றி கூறுகையில், ‘அவர் ஃபோர்ஸ்டரை விட மேன்மையானவரும் வேகமானவரும்’ என்று குறிப்பிடுகிறார்.

சந்தேகத்துக்கிடமின்றி, தாம்சன் பிரிதானிய ஏகாதிபத்தியத்தின் அந்திம காலத்தில் மேற்கு வங்கத்தில் இந்திய மற்றும் பிரித்தனிய வாழ்க்கை பற்றி மிகச்சரியாகவும் துள்ளியமாகவும் கூறினாலும், ஃபோர்ஸ்டரின் நோக்கம் (பீகாரை மையமாக வைத்து எழுதப்பட்டது) முற்றிலும் வேறுபட்டது, கவித்துவமான படைப்பு. ஒரு இலக்கியமாக ஃபோர்ஸ்டரின் புதினம் இன்றும் நினைவிலிருக்கின்றது, ஆனால் ஃபேர்வெல் டு இந்தியா முற்றிலுமாக எவர் மனதிலும் இல்லை. 

மரபார் குகைகளில், பாத்திரங்களின் பிரதிபலிப்புக்கள் வேறுபட்டிருந்தாலும் அனைத்து பொருட்களும் சகல மனிதரும் சமமின்றி வேறில்லை. அழிவிற்கிட்டுச்செல்லும் மரபார் குகைப்பயணத்திற்கு முன் Dr.அசீசோ அன்றேல் பிரித்தானிய பிரஜைகளோ குகைகளுக்கு எப்போதுமே சென்றதில்லை. அக்குகைகளைப் பற்றி அவர்களுக்கு விவரிக்க இருந்தது இந்து பிராமண பேராரசிரியர்  காட்போல் மட்டுமே. அவரது வார்த்தைகளில் அக்குகைகள் தெய்வீகமாகவும் இல்லை, அலங்காரமாகவும் இல்லை – அவர்களின் ஆர்வமிக்க கண்களுக்கு வியப்பாக ஏதும் தென்படவில்லை. கடவுளின்றி ஏதுமில்லை.

இந்தியாவில் தங்கியிருந்த ஆரம்ப காலத்தில், அடேலா மற்றும் திருமதி மூரின் ஃபீல்டிங் பாடசாலை விஜயத்தின் இறுதியில், ‘அறியப்படாத பறவையின் பாடலை’ காட்பால் பாடுகிறார். அது பற்றி குறிப்பிடுகையில் காட்பால், அதனை பகவான் கிருஷ்ணரை வரவேண்டி அழைக்கும் ஒரு பக்திப்பாடல் என்று சொல்கின்றார். ஆனால் ‘கிருஷ்ணர் வர மறுக்கின்றார்’: “ஐயகோ அவர் வர மறுக்கின்றார்,” அநேகமாக காட்பாலுக்கு அவளது கேள்வி புரியவில்லை போலும். “நான் அழைக்கிறேன் வா, வா, வா, வா, வா, வா. அவர் வராமல் புறக்கணிக்கின்றார்”.

புரிந்துகொள்ளவியலாத காட்பால் ஒருபுறமிருக்க, மரபார் பயணத்தின் பின், பிரித்தானிய ராஜ்ஜியத்தின் கிரிஸ்துவம் பற்றி கிடைக்கப்பெற்ற எண்ணற்ற சான்றுகள் காரணமாக திருமதி மூரின் கிரிஸ்தவ மதம் பற்றிய எண்ணம் சிறுத்து,  மெச்சப்படும் மறைவேத பிரகடங்களெல்லாம் அர்த்தமில்லா இரைச்சல் மாத்திரமே, வெறும் ‘வாய்ச்சவடாலிடும் அற்ப கிரிஸ்தவம்’ என்ற தோற்றப்பட்டை கொண்டது. இந்தியாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் திருமதி மூரை சந்தித்த ஓர் ஆங்கில தாதி தனக்கு ‘மதபோதகர்கள்’ (சாப்ளின் – பிரித்தானிய வளாகத்தில் பாதுகாப்பாக இருக்கும் மதகுருக்கள்) மீது இருக்கும் விருப்பையும், ‘மதப்பரப்பாளர்’ மீதான அவநம்பிக்கையையும் பற்றி திருமதி மூரிடம் வெளிபடையாக ஒப்புக்கொண்டார், ‘சுதேசிகளும்’ சொர்க்கம் செல்லாம் என்ற கருத்து திருமதி மூருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கலெக்டரின் தலையீடு மேலதிக விவரணைகளுக்கு தடங்கலாகின்றது. எவ்வறெனினும் சில பக்கங்களுக்கு பின்னர் வாசகர்களுக்கு இரண்டு மதபரப்பளர்கள் மறைமுகமாக அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். ஒருவர் வயதான திரு கிரேஸ்ஃபார்ட் அடுத்தவர், இளையவரான திரு சோர்லி. இவர்கள், ‘ஏழ்மையான புறநகரப்பகுதியில் வாழ்பவர்கள், ரயில் பயணங்களில் எப்போதும் மூன்றாம் வகுப்பில் பிரயாணிப்பர், இடாம்பீக வாழ்க்கையை ஒதுக்கியவர்கள்’. இந்த இரு மதப்பரப்பாளர்களிடம் வேடிக்கையான ஆனால் பரிதாபமான ஏதோ இருந்தது. அடிப்படையில் மிக நல்லவர்கள், ஏழ்மையில் உழண்றலும் எவரையும் நிராகரித்து ஒதுக்கியதில்லை. 

சகோதரர் திரு சோர்லியோ இன்னும் ‘மேம்பட்டவர்’, அவர் குரங்கிகளைக்கூட சொர்கத்திற்குள் அழைப்பார், “கடவுளின் கருணையோ அலாதியானது” என்பது அவரது நிலைப்பாடு. ஆனால் அவற்றிலும் ‘எம் கூட்டத்தில் யாரையேனும் நாம் விட்டுச்செல்லவேண்டும், இல்லையெனில் எமக்கு எதுவும் மிஞ்சாது’ என்று சில வரையரையுண்டு.

அவ்வாறே அடேலாவும் திருமதி மூரும் குகைக்குள் கைவிடப்பட்டது இதில் ஒரு கொடுமையான திருப்பம் – ஒரு பார்வையில் குகைக்குள் எதுவுமே நடக்கவில்லை ஆனால் எல்லம் நடந்ததும் அங்குதான்.

டேவிட் ஜாஸ்பர் எழுதிய ‘100 இயர்ஸ் ஆஃப் எ பேசேஜ் டு இந்தியாஃ இன்டர்நேஷனல் அஸ்ஸெஸ்மென்ட்ஸ்’ என்ற புத்தகத்தின் இந்த பகுதி ஓரியண்ட் பிளாக்ஸ்வானின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை ஹரிஷ் திரிவேதி தொகுத்துள்ளார்.

தொடர்புடைய கட்டுரைகள்