scorecardresearch
Thursday, 20 August, 2026
முகப்புஅரசியல்

அரசியல்

‘இரண்டு நிமிட புகழுக்காக’ – ஏக்னாத் ஷிண்டேயை ‘துரோகி’ என்ற குணால் கம்ரா வை விமர்சித்த பாஜக எம்.பி கங்கனா

புதிய இந்தியா என்ற கம்ராவின் மேடை நகச்சுவை நிகழ்வில், ஏக்னாத் ஷன்டேயை ‘துரோகி’ என சித்தரித்த கேலிப்பாடலுக்கு ‘நகைச்சுவை என்ற பெயரில் ஒருவரை அவதூறு செய்வது இழுக்கு’ என்று மண்டி பாராளுமண்ற உறுப்பினர் ரனாத் பதிலடி.

பா.ஜ.கவை ஆதரிக்காத மாநிலங்களின் இடங்களை எல்லை நிர்ணயம் பறிக்கும்’ – திமுக எம்.பி கனிமொழி

திபிரிண்ட்டிடம் பேசிய கனிமொழி கருணாநிதி, முன்மொழியப்பட்ட எல்லை நிர்ணயம், 3 மொழிக் கொள்கை குறித்துப் பேசுகிறார். மேலும், எதிர்க்கட்சிகள் கவலை தெரிவிப்பது வடக்கு-தெற்கு பிளவை உருவாக்குகிறது என்ற கருத்தை நிராகரிக்கிறார்.

யோகியின் 8 ஆண்டு அறிக்கை ‘மேம்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கை’ பெரிதும் சார்ந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் என்கவுண்டர்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தினமும் பதிவாகி வரும் நிலையில், 8 ஆண்டுகளைக் கொண்டாடுவதில் என்ன பயன் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக காங்கிரஸை விமர்சித்து வரும் வேளையில், சிவகுமாரின் “அரசியலமைப்பு மாற்றம்” கருத்து நிலைமையை தலைகீழாக மாற்றுகிறது

கர்நாடக துணை முதல்வர், அரசியலமைப்பை மாற்றிய தீர்ப்புகள் குறித்து 'சாதாரண' குறிப்புகளை மட்டுமே கூறியதாகக் கூறுகிறார், அதே நேரத்தில் முஸ்லிம் ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்ற விரும்புவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

‘புதிய கேரளா’ என்ற எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, பாஜக புதிய மாநிலத் தலைவராக ராஜீவ் சந்திரசேகரை நியமித்துள்ளது.

பாலக்காடு இடைத்தேர்தலின் போது மாநில பாஜக பிரிவில் ஏற்பட்ட கோஷ்டி பூசலைத் தொடர்ந்து, 2020 முதல் கேரளாவில் கட்சித் தலைவராக இருக்கும் கே. சுரேந்திரனுக்குப் பதிலாக சந்திரசேகர் நியமிக்கப்பட உள்ளார்.

குணால் கம்ரா விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ்

நகைச்சுவைத் தொகுப்பின் போது துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை 'துரோகி' என்று கம்ரா அழைத்தார். இதற்கிடையில், மும்பையில் சிவசேனா உறுப்பினர்கள் அரங்கத்தை சேதப்படுத்தியதை அடுத்து, எதிர்க்கட்சியினர் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பினர்.

எம்.எல்.ஏ.க்களின் கடிதங்கள், அழைப்புகள் ஏன் டெல்லி அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகின்றன என்று சட்டமன்ற சபாநாயகர் கேள்வி

தலைமைச் செயலாளர் தர்மேந்திராவுக்கு எழுதிய கடிதத்தில், விஜேந்தர் குப்தா இந்த விவகாரத்தை 'தீவிரமான விஷயம்' என்று குறிப்பிட்டு, இணக்க அறிக்கையையும் கேட்டுள்ளார்.

நடத்தை விதிகள் கடுமையாக்கப்பட உள்ளதால், ஃபட்னாவிஸ் அரசு அதிகாரிகளுக்கு சமூக ஊடக நெறிமுறைகள் கற்பிக்கப்படும்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அதிகாரிகளுக்கு எச்சரிக்கையுடன், ஒரு அரசாங்கத் தீர்மானம் வரவிருக்கிறது என்று சட்டமன்றத்தில் கூறுகிறார்.

நாக்பூர் வன்முறையை ஆர்.எஸ்.எஸ் கண்டிக்கிறது

புதன்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஆர்.எஸ்.எஸ்-இன் அகில பாரதிய பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர், 'எந்த வகையான வன்முறையும் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல' என்று கூறினார்.

மொழிப் போரை நடத்தும் தமிழகம், ஆனால் தரவுகள் வேறு கதையைச் சொல்கின்றன – தமிழ் வழிப் பள்ளிகளில் சேர்க்கை குறைந்து வருகிறது

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் இந்தப் போக்கு தொடங்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் 'கூற்று' மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது என்று திமுக வலியுறுத்துகிறது.

மணிப்பூருக்கு செல்லாததற்காக மோடியை எதிர்க்கட்சி மீண்டும் தாக்குகிறது

ராஜ்யசபாவில், பிஜு ஜனதா தள எம்.பி. சுலதா தியோ, பிரதமர் 2022 முதல் மணிப்பூருக்குச் செல்லவில்லை, ஆனால் '40 முறை' வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார் என்று கூறுகிறார். 7,000 பேர் வீடு திரும்பியுள்ளதால் மாநிலத்தில் நிலைமை மேம்பட்டு வருவதாக பாஜக கூறுகிறது.

ஆந்திர முதல்வர் நாயுடு மும்மொழிக் கொள்கையை ஆதரித்து, மொழி வெறுப்பை ‘அர்த்தமற்றது’ என்று அழைத்தார்

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருத்துக்கள், துணை முதல்வர் பவன் கல்யாண், இந்திக்கு எதிரான தமிழக அரசியல்வாதிகளை 'சமஸ்கிருதத்தை துஷ்பிரயோகம்' செய்வதாகக் குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளன.