புதுடெல்லி: ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுப்படி, ரஷ்யா-உக்ரேன், மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களால் உந்தப்பட்டு உலகின் பல்வேறு பதட்ட நிலைகளால் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டில் உலக இராணுவதளபாட விற்பனையின் 50 சதவீதத்தை பதிவுசெய்துள்ளது, இது அதற்கு முந்தய ஆண்டின் விற்பனையைவிட 2.5 சத்வீதம் அதிகமாகும்.
2023ம் ஆண்டில் $317 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் அமெரிக்கா விற்றிருகின்றது.
SIPRIயின் டாப் 100 பாதுகாப்பு நிறுவனங்களின் ஆயுத வருவாய், 2022 உடன் ஒப்பிடும்போது 4.2 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகளாவிய ஆயுதத் துறையின் வருவாய் 2023 இல் 632 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
அமெரிக்கர்களுக்கு அடுத்ததாக சீன நிறுவனங்கள் 16 சதவித சந்தைப்பங்குடன் $103 பில்லியன் பெறுமதியான ஆயுத வியாபரம் செய்திருக்கின்றது. எவ்வாறெனினும், சர்வதேச இராணுவ செலவீனங்களில் அமெரிக்காவும் சீனாவும் முதலிரண்டு இடங்களை வகிப்பது கவனிக்கத்தக்க ஒரு விஷயம்.
இராணுவ ஆயுத உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளின் ஒப்பீட்டுத் தரவரிசையில், இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. அரச நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் மசாகன் டாக்ஸ் லிமிடெட் உள்ளடங்கிய அதன் மூன்று பாதுகாப்பு நிறுவனங்களின் மொத்த ஆயுத வருவாய் முதல் 100 தரவரிசையில் 5.8 சதவீத வர்த்தக அதிகரிப்புடன் வருவாய் $6.7 ஆக உள்ளது.
எவ்வாறாயினும், 2023ம் ஆண்டுக்கான தேசவாரி ஒப்பீட்டில் இந்த மூன்று நிறுவனங்களின் பங்கு மொத்த ஆயுத விற்பனையில் வெறும் 1.1 சதவீதம் மட்டுமே.
ரஷ்யா – உக்ரைந் நாடுகளுக்கிடையிலான முறுகல் நிலை, அமெரிக்க ஆயுத வருவாய் அதிகரிப்பின் முக்கிய காரணங்களுள் ஒன்று. உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறலை தொடர்ந்து ஆயுத விற்பனை வெகுவாக உயர்வதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அவதானித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை தகவல்களின்படி, 2023 இல் அமெரிக்கா ஐரோப்பிய நட்பு மற்றும் கூட்டணி நாடுகளுடனான ஆயுத வர்த்தகத்தில், இராணுவ உபகரணங்கள் மற்றும் போர்த்தளவாட விற்பனையில் சாதனை வருவாயீட்டியுள்ளது.
SIPRI டாப் 100 இல் பட்டியலிடப்பட்டிருக்கும் உலகளாவிய நிறுவனங்களில் கால் பகுதியினர் அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் உலகம் முழுவதும் ஈடுபட்டுள்ளதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட 41 நிறுவனங்கள் தனித்து தமது ஆயுத வருவாயை 2023 ஆம் ஆண்டில் 317 பில்லியன் அமெரிக்க டாலரில் அதிகரித்திருக்கின்றன, இது 2.5 சதவீத வளர்ச்சியாகும். முதல் ஐந்து பிரதான அமெரிக்க ஆயுத நிறுவனங்களாக லொக்கீட் மார்டின், RTX, நோத்ரொப் க்ரூமன், போயிங் மற்றும் ஜென்ரல் டைனமிக்ஸ் நிறுவனங்கள் கருதப்படுகின்றன, எவ்வாறாயினும், முதலிரண்டு இடங்களிலிருக்கும் லொக்கீட் மார்டின், மற்றும் RTX ஆகியன பணவீக்கத்திற்கு எதிராக எஇதி சீராக்கலின் பின், முறையே -1.6, -1.3 சதவீத வீழ்ச்சியை காட்டுகின்றன.
அறிக்கையின்படி, அந்நிறுவனங்களின் ஆயுதங்களுக்கும் இராணுவ தளவாடங்களுக்குமான கேள்வி உயர்வாக இருந்தபோதும், வானூர்தி மற்றும் ஏவுகணை பாதுகாப்பு போன்ற முக்கிய பிரிவுகளில் முட்டுக்கட்டையாகவிருக்கும் விநியோகத் தொடர்வுச் சவால்கள், இந்நிறுவனங்கள் தம் உற்பத்தி அளவை அதிகரித்துக்கொள்ள இயலாமையால் இவ்வருமான வீழ்ச்சிக்கு காரணமென கூறுகின்றது.
சீனாவை பொருத்தமட்டில், ஒன்பது நிறுவனங்கள், AVIC, NORINCO, CETC, CASC, CSSC, CASIC, AECC, CSGC மற்றும் CNNC ஆகியன முதல் 100 தரவரிசைக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று நிறுவனங்கள் முதல் 10 பட்டியலில் இருக்கின்றன.
முதல் 100 நிறுவனங்கள் அட்டவனையில், 2022 ஆம் ஆண்டில் 47 நிறுவனங்களாக இருந்த எண்ணிக்கை, 2023 இல் 73 நிறுவனங்கள் வருடாந்திர வளர்ச்சியை கண்டிருக்கின்றன. அதிகரித்துவரும் உலகலாவிய பிராந்திய அரசியல் பதட்டநிலை, ஆயுதங்களுக்கும் இராணுவ உபகரணங்களுக்குமான அசாதாரண கேள்வி அதிகரித்ததே இவ்வளர்ச்சிக்கு மூல காரணம் என்று, ‘முதல் 100 ஆயுத தயாரிப்பு மற்றும் இராணுவச் சேவை நிறுவனங்கள், 2023’ SIPRI அறிக்கை சொல்கின்றது.
உலகளாவிய பதட்ட நிலையின் மற்றுமோர் வெளிப்பாடாக, குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையிலான மோதல், விநியோகச்சங்கிலி இடையூறூகள் மாத்திரமல்லாமல் மூலப்பொருள் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்களும், அதிநவீன ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திச் செலவீனங்கள் அதிகரிப்புக்கு காரணமாகின்றன.
ஏறத்தாழ $1.5 ட்ரிலியன் மதிப்புள்ள பூரண அணுசக்தி நவீனமயமாக்கல் திட்டம் உட்பட பல முக்கிய உயர்நிலை திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தில் இருக்கின்றது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs), அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் (SSBNகள்), போர்த் திறம் வாய்ந்த குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் அணு ஆயுதங்கள் உட்பட, அமெரிக்காவின் அனைத்து அணுவாயுதப் படைத் தொகுதிகளையும் புணரமைப்பது அல்லது அவற்றைத் தரமுயர்த்துவதே இத்திட்டங்களின் இலக்காகும். நோத்ரொப் க்ரூமன் 650 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் (ICBMs), 100 எதிர்காலத் தலைமுறை (B12) போர்த் திறம் வாய்ந்த குண்டுவீச்சு விமானங்களையும் உருவாக்குகின்றது. இப்புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs), பகுதியாக சண்டியா தேசிய ஆய்வகத்தினால் வடிவமைக்கப்பட்ட நூதனமான வெடிப்பாற்றலுடைய முனைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கும்.
அறிக்கையின்படி, தற்போதிருக்கும் போர்த் திறம் வாய்ந்த குண்டுவீச்சு விமானங்கள் ரொல்ஸ் ரொய்ஸ் விசைப்பொறியையும், RTX இன் ராடாரையும் கொண்டதாக தரமுயர்த்தப்படும். த்ற்போதிருக்கும் நீர்முழ்கிகளுக்கு மாற்றீடாக, ஜெனரல் டைனமிக்ஸும் HIIஉம் குறிந்தபட்சமாக 12 SSBNகளை தயாரித்துக்கொண்டிருக்கின்றன.
அதே சமயத்தில், சீனாவும் தனது முப்படைகளான ஆகாய, தரைவழி, மற்றும் கடல்வழி அணுசக்தி படைகளை நவீனப்படுத்துகின்றது. AVIC, 2020 ஆம் ஆண்டில் முதன்முறையாக களமிறக்கப்பட்ட அணுவாயுத காவுதிறன் கொண்ட, ஆகாய மீள்நிரப்பு வசதியுள்ள குண்டுவீச்சு விமானங்களை உருவாக்குகின்றது. CASC, பழமையான குழாய்க்கோபுர (silo-based), திரவெரிபொருள் ஏவுகணைகளுக்கு மாற்றீடாக, புதிய இலகுவான திட-எரிபொருள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBMs),
CSSC ஆல் நிர்மாணிக்கப்பட்ட ஆறு SSBNகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளையும் CASC தயாரிக்கின்றது. சீனாவின் அடுத்த தலைமுறை SSBN களை உருவாக்குவதற்கும் CSSC பொறுப்பேற்றிருக்கின்றது என ஆய்வு கூறுகிறது. இதற்கிடையில், CNNC அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் இராணுவ பயன்பாடுகளுக்கான வழுவை வழங்குகிறது.
