scorecardresearch
Sunday, 14 September, 2025
முகப்புசுற்றுச்சூழல்வளிமண்டல மாற்றங்களை அனுசரித்து இடப்பெயர்வு உபாயங்களை நெறிப்படுத்தும் பூச்சியுண்ணி வௌவால்கள்

வளிமண்டல மாற்றங்களை அனுசரித்து இடப்பெயர்வு உபாயங்களை நெறிப்படுத்தும் பூச்சியுண்ணி வௌவால்கள்

ScientiFix, எங்கள் வாராந்திர அம்சம், வாரத்தின் சிறந்த உலகளாவிய அறிவியல் கதைகளின் சுருக்கத்தை அவற்றின் ஆதார மீத்தொடுப்புடன் வழங்குகிறது.

புதுடெல்லி: ஒவ்வொரு வசந்த காலத்திலும், ஐரோப்பா முழுவதும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கும் பாலூட்டியான பூச்சியுண்ணி வௌவால்களின் (common noctule bat) இடம்பெயர்வு யுக்தியை ஒரு புதிய ஆய்வு தெளிவு படுத்தியிருக்கின்றது. இந்த வெளவால்கள் தங்கள் இடம்பெயர்வை எளிமையாக்கவும், ஆற்றல் விரயத்தை பாதுகாத்துக்கொள்ளவும் ‘வெப்ப-புயல் முனை’ எனும் வளிமண்டல உலர்-குளிர் வானிலை மாற்றத்தை பயன்படுத்துகின்றன என்ற ஆய்வு முடிவுகளை  ‘சயன்ஸ்’ இதழ் வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. 

வெப்ப-புயல் முனை என்பது, பெருமழை அல்லது புயல் ஏற்படுவதற்கு முன்னதான ஒரு வளிமண்டலவியல் வானிலை மாற்ற காரணியாகும்.  

விஞ்ஞானிகள் 71 வெளவால்களின் உடலில் உணரிகளை இணைத்து, வசந்த காலத்தில் அவற்றின் வழிகள், நிறுத்தங்கள் மற்றும் பறக்கும் முறைகளை அவற்றைக் கண்காணித்தனர். வெப்ப புயல் முனை சந்தர்ப்பங்களின்போது வௌவால்களின் பறக்கும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க துரிதம் இருப்பதை  அவதானித்திருக்கின்றனர். 

இடம்பெயர்வே பறவைகளின் பலம் என்று பரவலாக நம்பப்படுகிறது. முதன்முறையாக பூச்சியுண்ணி வெளவால்களின் புலம்பெயரும் செயல்பாடுகளை துல்லியமாக கவனித்த முக்கியத்துவத்தை இந்த ஆய்வு பெற்றுக்கொள்கின்றது.  

வௌவால்களின் நடத்தையை ஆய்வு செய்ததன் மூலம் இந்த விஞ்ஞானிகள், அவற்றில் சில ஒரே இரவில் 400 கிமீ வரை பயணிக்கின்றன என்பது போன்ற சில புதிய தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.

வியக்கத்தக்க வகையில், இவ்வகை வெளவால்கள் இடம்பெயர்ச்சிக்கு முன் அதிகமாக ஊணவு உட்கொள்வதோ அல்லது எடையை அதிகரிப்பதோ இல்லை.

மாறாக, அவை பயணம் முழுவதும் உணவுட்கொள்வதற்காக பல நிறுத்தங்களுடன் கூடிய பயண முறையைப் பின்பற்றுகின்றன.

2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை சந்திரனுக்கு பலவீனமான காந்தப்புலமே இருந்தது

இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை சந்திரனில் பலவீனமான காந்தப்புலமே இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதுவரை மர்மமாகவே இருக்கும் சந்திரனின் காந்தப்புலம் உருவாகலும், பின்னர் மெதுவாக வீரியமிழக்கும் காந்தபுலம் பற்றிய, பிறைக்காந்த உருவாக்க பிண்ணனியை புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.

விஞ்ஞானிகள் சீனாவின் Chang’e 5 விண்வெளிப்பிரயாணத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்விற்கு பயன்படுத்தியதாக சயன்ஸ் அட்வான்சஸ் இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வின் ஒரு பகுதியான தெரிவிக்கின்றது. 

காந்தமயமாக்கல் சோதனைகள் இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பாறைகள் இரண்டு முதல் நான்கு மைக்ரோடெஸ்லா செரிவு கொண்ட காந்தப்புலத்தைக் கொண்டிருந்தன, அவை பலவீனமாக இருந்தாலும், காந்தப்புலம் இருப்பதற்கான சான்றாகின்றன என்று கருதுகின்றனர். நிலவுக்குள் வெப்பச்சலனம் அல்லது பாறைகள் மற்றும் பதார்த்தங்களின் அசைவியக்கம் இருந்திருந்தால் பிறைக் காந்தப்புலம் இன்றளவும் இருந்திருக்கும் என்பது விஞ்ஞானிகள் முன்வைக்கும் கோட்பாடுகளில் ஒன்று.

இறுதிப் பனி யுகத்தின் சடுதியான காலநிலை மாற்ற காலங்களில் காட்டுத் தீ அதிகரித்தது

இறுதிப் பனி யுகம் அல்லது பனிப்பாறை காலத்தில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றம் – ஏறத்தாழ 100,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 25,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்த காலநிலை மாற்றம் – அதிகரித்த காட்டுத்தீயுடன் ஒத்துப்போகிறதை ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

அண்டார்டிக் பனியில் சிறைப்பட்டிருக்கும் புராதன வாயு குமிழ்களின் ஆதாரங்களை ஆய்வு செய்ததன் விளைவாக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்திருக்கின்றனர்.

இந்த ஆய்வு நேச்சர் இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

முந்தைய ஆராய்ச்சியின்படி, இறுதிப் பனி யுகத்தில் காலநிலை மாற்ற நிகழ்வுகளின் திடீர் அதிகரிப்பு, அசாதாரண வெப்பநிலை உயர்வு மற்றும் மாறிவரும் மழைப்பொழிவு முறைகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டது. அத்தகைய காலகட்டங்களில், அண்டார்டிக் பனியில் சிறைப்பட்டிருக்கும் பச்சைவீட்டு வாயுக்குமிழிகளில், மீத்தேன் அளவுகள் அசாதாரணமானளவு உயர்வாக இருப்பது உறுதி செயய்கின்றது.

இதன் பின்னணியில் உள்ள காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

அமெரிக்க மற்றும் சுவிஸ் விஞ்ஞானிகளால் பொருண்மை நிற அலைமானியை (மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்) பயன்படுத்தி அண்டார்டிக் பனியில் சிறைப்பட்டிருக்கும் புராதன மீத்தேன் குமிழ்களின் பகுப்பாய்வு செய்ததில், இறுதிப் பனி யுகத்தில் வளிமண்டல மீத்தேன் அதிகரித்ததற்கு உலகளாவிய காட்டுத் தீ காரணமாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

இந்த ஆய்வு, இறுதிப் பனிப்பாறை காலத்தில் மீத்தேன் உயர்ச்சியை முதன்முதலில் விளக்கியதுடன், கடந்த காலங்களில் காலநிலை மாற்றச் சுழற்சிகள் பற்றிய கருத்தியல்களை தெளிவுபடுத்துகின்றது.

பெரும்பாலான புற்றுநோய்கள் நுரையீரலுக்கு ஏன் பரவுகின்றன

புற்றுநோய் மெட்டாஸ்டாசிஸ் அல்லது புற்றுநோய் கலங்களின் பரவலிற்கு நுரையீரல் இலக்காக இருப்பதற்கான காரணத்தை பெல்ஜிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளில் நோய்ப்பதக கட்டிகள்  பாதித்த அங்கத்தைத் தாண்டி நுரையீரலில் பரவுவதைக் காண்கிறார்கள், இவ்வசாதாரணநிலை நுரையீரல் மெட்டாஸ்டாசிஸ் என்று அழைக்கப்படுகிறது.

நேச்சர் இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வறிக்கையின்படி, உடலின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் நுரையீரலில் உள்ள அஸ்பார்டேட் என்ற அமினோ அமிலம், புற்றுநோய்க் கலங்களின் பரிமாற்றங்களை (செல்கள் மெசெஞ்சர் ஆர்என்ஏவை புரதங்களை உருவாக்க பயன்படுத்துகிறது) துரிதப்படுத்துகின்றது. 

அஸ்பார்டேட் நுரையீரலில் அதிக அளவில் உள்ளது,  மற்றும் புற்றுநோய் செல்களில் ஒரு குறிப்பிட்ட புரத வாங்கிகளை தூண்டுவதுடன், அந்நோய்க் கலங்கள் பெருகி வளர நுரையீரல் மிகவும் பொருத்தமான சூழலை வழங்குகின்றது.

நுரையீரல் மெட்டாஸ்டாசிஸை குறைக்கும் நோக்கத்துடன் நுரையீரலில் உள்ள புற்றுநோய்க் கலங்களின் பரிமாற்ற செயல்முறையை கட்டுப்படுத்தும் முறையை முன்னிலப்படுத்தி மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை விஞ்ஞானிகள் இப்போது தேடலாம் என்பதனால் பெல்ஜிய விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.

தொடர்புடைய கட்டுரைகள்