scorecardresearch
Monday, 15 September, 2025
முகப்புஆரோக்கியம்நுண்ணுயிர் கொல்லியை எதிர்க்கும் மீயுயிரி காரணமாக 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 10.4 லட்சம் பேர்...

நுண்ணுயிர் கொல்லியை எதிர்க்கும் மீயுயிரி காரணமாக 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 10.4 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்: லான்செட் அறிக்கை

கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள், 2050 ஆம் ஆண்டில் உலகளவில் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு நோய்த்தொற்றுகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 39 கோடிக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி: 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் 3 முதல் 10.4 லட்சம் பேர் வரை பாக்டீரியா நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு (bacterial antimicrobial resistance) காரணமாக இறந்தனர் என்று ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு குறித்த புதிய உலகளாவிய ஆராய்ச்சி (GRAM) திட்டம் தெரிவித்துள்ளது. நோய்க்கிருமிகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் பாதிக்கப்படாத நிலையை ஏ எம் ஆர் (AMR) என்பர். ஏ எம்  ஆர் இன் உலகளாவிய சுமை பற்றிய முதல் பகுப்பாய்வான இந்த திட்டம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டாண்மை ஆகும்.

தி லான்செட்டில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள், 2050 ஆம் ஆண்டில் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு நோய்த்தொற்றுகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 39 கோடிக்கும் அதிகமான இறப்புகள் உலகளவில் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

செப்சிஸால் (தொற்றுநோய்க்கு தீவிர எதிர்வினை) தூண்டப்பட்ட நிலைமைகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாட்டில் 29.9 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும் ஏஎம்ஆர் க்கு அதன் மேலாண்மை கடினமாகிவிட்டது என்றும் தி லான்செட் அறிக்கை கூறுகிறது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு வலையமைப்பின் (IAMRSN) ஆண்டு அறிக்கையின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் வந்துள்ளன, இது மீயுயிரிகளின் (superbug) ஆபத்தான இருப்பை வெளிப்படுத்தியது. 2017 முதல் 2023 வரை நாட்டின் 21 முன்னணி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ்  மற்றும் சர் கங்கா ராம் மருத்துவமனை, சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (பிஜிஐஎம்இஆர்) மற்றும் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவமனைகளின் புறநோயாளர் துறைகள் (ஓபிடி), வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் (ஐ.சி.யூ) ஆகியவற்றிலிருந்து 2017 மற்றும் 2023 க்கு இடையில் சேகரிக்கப்பட்ட நோயாளி மாதிரிகளில் (இரத்தம், சிறுநீர் மற்றும் பிற திரவங்கள்) மீயுயிரிகள் கண்டறியப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் செப்சிஸ் இறப்புகளில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பாக்டீரியா (பற்றுயிரி) தொற்றுகளால் ஏற்பட்டதாகவும், மீதமுள்ள 40 சதவீதம் வைரஸ்கள் (தீநுண்மி), பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்பட்டதாகவும் லான்செட் அறிக்கை தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 3,25,091 பேர் பாக்டீரியா தொற்று காரணமாக இறந்துள்ளனர் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கண்டறியப்பட்ட பாக்டீரியா (பற்றுயிரி)  ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா ஆகும், இது 2019 ஆம் ஆண்டில் 58,212 இறப்புகளுடன் தொடர்புடையது.

இந்தியாவில், பாக்டீரியா (பற்றுயிரி) ஏ.எம்.ஆர் இறப்புகள் ஆறு முக்கிய மீயுயிரிகளுடன் தொடர்புடையவை என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அவை, எஸ்கெரிச்சியா கோலி (Escherichia coli), க்ளெப்சியெல்லா நிமோனியா (Klebsiella pneumoniae), ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் (Staphylococcus aureus), அசினெடோபாக்டர் பௌமனி (Acinetobacter baumannii), மைக்கோபாக்டீரியம் காசநோய் Mycobacterium tuberculosis மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா (Streptococcus pneumoniae).

 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 6,86,908 இறப்புகள் இந்த மீயுயிரிகளுடன் மறைமுகமாக தொடர்புடையவை மற்றும் அதே ஆண்டில் 2,14,461 இறப்புகள் நேரடியாக தொடர்புடையவை என்று ஐ.எச்.எம்.இ தெரிவித்துள்ளது.

ஏ.எம்.ஆர்-தொடர்புடைய இறப்புகள் மருந்து எதிர்ப்பு நோய்த்தொற்றுகளால் தூண்டப்பட்ட நிலைமைகளால் நிகழ்கின்றன, மேலும் ஏ.எம்.ஆர்-காரணமான இறப்புகள் சிகிச்சையளிக்கப்படாத மருந்து எதிர்ப்பு நோய்த்தொற்றுகளின் விளைவாக நேரடியாக நிகழ்கின்றன.

70 வயதுக்கு மேற்பட்டோரில்  உலகளாவிய ஏ.எம்.ஆர் இறப்புகள் 2050 க்குள் இரட்டிப்பாகும்

புதிய லான்செட் அறிக்கை 204 நாடுகள் மற்றும் பிரதேசங்களில், அனைத்து வயதினரிடமும் 22 நோய்க்கிருமிகள், 84 நோய்க்கிருமி-மருந்து சேர்க்கைகள் மற்றும் 11 தொற்று நோய்க்குறிகள் (மூளை மற்றும் முதுகெலும்பைச் சுற்றியுள்ள திசுக்களின் வீக்கத்தைக் குறிக்கும் மூளைக்காய்ச்சல் உட்பட; மற்றும் இரத்த ஓட்ட நோய்த்தொற்றுகள் உட்பட) மதிப்பீடுகளைக் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனை தரவு, இறப்பு பதிவுகள் மற்றும் ஆண்டிபயாடிக் பயன்பாட்டு தரவு உள்ளிட்ட பரந்த அளவிலான மூலங்களிலிருந்து 52 கோடி தனிப்பட்ட பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடுகள் அமைந்தன.

1990 மற்றும் 2021 க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும், ஏ.எம்.ஆர் இன் நேரடி விளைவாக உலகளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்ததாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், அதே காலகட்டத்தில், உலகளவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே மொத்த ஏ.எம்.ஆர் இறப்புகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே 80 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு  மற்றும் 2050 க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் சுமார் 19.1 லட்சம் பேர் ஏ.எம்.ஆர் இன் நேரடி விளைவாக இறக்கக்கூடும் என்று அது மேலும் கூறியுள்ளது.

அதே காலகட்டத்தில், ஏ.எம்.ஆர் பாக்டீரியா (பற்றுயிரி) பங்கு வகிக்கக்கூடிய உலகளாவிய இறப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 47.2 முதல் 82.2 லட்சமாக கிட்டத்தட்ட 75 சதவீதம் அதிகரிக்கும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே உலகளவில் ஏ.எம்.ஆர் இறப்புகளின் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் பாதியாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே இது இரண்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

நோய்த்தொற்றைத் தடுப்பது, தடுப்பூசி போடுவது, பொருத்தமற்ற ஆண்டிபயாடிக் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் 2050 ஆம் ஆண்டளவில் ஏற்படக்கூடிய ஏஎம்ஆர் இறப்புகளின் எண்ணிக்கையைத் தணிக்க புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் குறித்த ஆராய்ச்சி போன்ற தலையீடுகளின் முக்கிய தேவையை கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

“நுண்ணுயிர் கொல்லி் மருந்துகள் நவீன சுகாதாரப் பராமரிப்பின் அடிப்படைகளில் ஒன்றாகும், மேலும் அவற்றுக்கு வளர்ந்து வரும் எதிர்ப்பு கவலைக்கு ஒரு முக்கிய காரணம்” என்று ஆய்வறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரும், ஐ.எச்.எம்.இ.யின் ஏ.எம்.ஆர் ஆராய்ச்சி குழுவின் குழுத் தலைவருமான டாக்டர் மொஹ்சென் நாகவி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இந்த கண்டுபிடிப்புகள் பல தசாப்தங்களாக ஏ.எம்.ஆர் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது என்பதையும், இந்த அச்சுறுத்தல் வளர்ந்து வருகிறது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. காலப்போக்கில் ஏ.எம்.ஆர் இறப்புகளின் போக்குகள் எவ்வாறு மாறிவிட்டன என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் எதிர்காலத்தில் அவை எவ்வாறு மாறக்கூடும் என்பதைப் புரிந்துகொள்வது, உயிர்களைக் காப்பாற்ற உதவுவதற்கு தகவலறிந்த முடிவுகளை எடுக்க முக்கியமானது, ” என்று அவர் மேலும் கூறினார்.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா

இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் குறிப்பாக ஏ.எம்.ஆரால் பாதிக்கப்படக்கூடியவை, இது அதிக தொற்று நோய்கள், அதிகரித்த நுண்ணுயிர் கொல்லி பயன்பாடு மற்றும் கோவிட்-19 தொற்றுநோயால் மோசமடைகிறது.

கடந்த வாரம் வெளிவந்த ஐ.சி.எம்.ஆர் அறிக்கை, எஸ்கெரிச்சியா கோலை (Escherichia coli) மிகவும் பொதுவாக தனிமைப்படுத்தப்பட்ட நோய்க்கிருமி என்றும், அதைத் தொடர்ந்து க்ளெப்சியெல்லா நிமோனியா (Klebsiella pneumoniae), அசினெடோபாக்டர் பௌமன்னி (Acinetobacter baumannii) மற்றும் சூடோமோனாஸ் ஏருஜினோசா (Pseudomonas aeruginosa) ஆகியவை உள்ளன என்று கூறிப்பிட்டுளளது.

எஸ்கெரிச்சியா கோலை தனிமைப்படுத்தல்கள் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு (அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்திறன்) எளிதில் பாதிக்கப்படுவதை நிரூபித்தன. ஆண்டிபயாடிக் கலவையான பைபராசிலின்-டசோபாக்டமுக்கு எதிரான பாக்டீரியாவின் பாதிப்பு 2017 இல் 56.8 சதவீதத்திலிருந்து 2023 இல் 42.4 சதவீதமாகக் குறைந்தது, மேலும் அமிகாசினுக்கு எதிராக 2017 இல் 79.2 சதவீதத்திலிருந்து 2023 இல் 68.2 சதவீதமாகக் குறைந்தது.

மனித குடலில் இயற்கையாகவே இருக்கும் எஸ்கெரிச்சியா கோலையின் சில விகாரங்கள் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். 

 ஐ.சி.எம்.ஆர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிற மீயுயிரிகளும்  தற்போதுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு ஏற்ப இதேபோன்ற இழப்பை வெளிப்படுத்தின.

“ஆண்டுக்கு ஆண்டு, நுண்ணுயிர் எதிர்ப்பிகளால், முன்னுரிமை நோய்க்கிருமிகளின் பாதிப்பு அடைவது குறைந்து வருகிறது, அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது என்று அறிக்கை காட்டுகிறது. அற்பமான நோய்த்தொற்றுகள் கூட ஆபத்தானதாக மாறும் ஒரு சகாப்தத்தை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம் என்பதே இதன் பொருள், குறிப்பாக நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு” என்று திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் தொற்று நோய்கள் துறைத் தலைவர் டாக்டர் அரவிந்த் ஆர். திபிரிண்டிடம் கூறினார்.

“இந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவின் உயர்மட்ட மூன்றாம் நிலை பராமரிப்பு நிறுவனங்களில் ஏ.எம்.ஆரின் அளவை பிரதிபலிக்கின்றன. இந்த தரவுகள் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது, மேலும் நிலைமை ஆண்டுதோறும் மோசமடைந்து வருவதாகத் தெரிகிறது” என்று கேரள ஆண்டிபயாடிக் எதிர்ப்பு மூலோபாய செயல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் அரவிந்த் கூறினார்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி திபிரிண்டிடம் கூறுகையில், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு நிறுவனங்களில் நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு போக்குகளை ஹப்-அண்ட்-ஸ்போக் (hub-and-spoke)அணுகுமுறை மூலம் கைப்பற்ற ஏ.எம்.ஆர் கண்காணிப்பு நெட்வொர்க்குகளை நிறுவ இந்த கண்டுபிடிப்புகள் உதவக்கூடும் என்று கூறினார்.

“மூன்றாம் நிலை, இரண்டாம் நிலை மற்றும் முதன்மை பராமரிப்பு மையங்களைப் பொறுத்தவரை சுகாதாரப் பராமரிப்பின் பல்வேறு அடுக்குகளில் நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பை பிரதிபலிக்கும் இத்தகைய அடுக்கு ஆண்டிபயோகிராம்கள் (ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வெவ்வேறு உயிரினங்களுக்கான நுண்ணுயிர் கொல்லி  உணர்திறன் சோதனைகளின் அட்டவணை), அடுக்கு-குறிப்பிட்ட நுண்ணுயிர் கொல்லி் மருந்து வழிகாட்டுதல்கள் மற்றும் பிற மேற்பார்வை தலையீடுகளை உருவாக்க தேவை” என்று விஞ்ஞானி மேலும் கூறினார்.

தொடர்புடைய கட்டுரைகள்