scorecardresearch
Tuesday, 16 September, 2025
முகப்புஇந்தியாவாட்ஸ்அப் மூலம் கைது செய்யப்பட்டு, வயதான சோனிபட் தம்பதியினர், 1.78 கோடி ரூபாயை ஏமாற்றி, ஹோட்டலில்...

வாட்ஸ்அப் மூலம் கைது செய்யப்பட்டு, வயதான சோனிபட் தம்பதியினர், 1.78 கோடி ரூபாயை ஏமாற்றி, ஹோட்டலில் பதுங்கியிருக்க வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

75 வயதான சோனிபட் நபர் ‘பணமோசடி விசாரணை’யில் சிக்கியதாகக் கூறப்பட்டதாக FIR கூறுகிறது. போலிஸ் போல் தங்களை உருவகப்படுத்திக்கொண்டு, மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப்பில் ‘எஃப்ஐஆர் மற்றும் கைது வாரண்ட்’ நகல்களை கூட பகிர்ந்துள்ளனர்.

குருகிராம்: ஒரு தொலைபேசி அழைப்பில் தொடங்கி, பின்னர் வாட்ஸ்அப்பில் ‘எஃப்ஐஆர்’ மற்றும் ‘கைது வாரண்ட்’ நகல் பகிரப்பட்டிள்ளது. இந்த ‘பணமோசடி விசாரணை’யின் முடிவில், ‘சட்டத்தின் பெயரால்’ ரூ.1.78 கோடி ஏமற்றப்பட்டிருக்கின்றதை 75 வயதான வினோத் சவுத்ரி அறிந்திருக்கவில்லை.

ஹரியானா மாநிலம், சோனிபட்டில் உள்ள உள்ளூர்வாசி ஒருவர் தன்னையும் தனது மனைவியையும் சைபர் கிரைமினல்கள் சூழ்ச்சி செய்து, அவர்களை இரண்டு நாட்கள் ஹோட்டலில் மறைந்துருக்கவைத்து, தனது தொலைபேசி கேமரா மூலம் தங்களை ‘கண்காணித்து’ ரூ.1 கோடிக்கு மேல் மிரட்டி பணம் பறித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FIR இன் படி, மோசடிக்காரர்கள் சவுத்ரியிடம் பணத்தை சரிபார்ப்பதற்காக “அரசு கணக்குகளுக்கு” ​​மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மோசடிக்காரர்களால் வழங்கப்பட்ட அந்த கணக்குகள் போலியானவை என்றும், மோசடிக்காகவே போலியான பெயர்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நவம்பர் 14 முதல் 20 வரை இந்தக் கணக்குகளுக்கு ஆர்டிஜிஎஸ் (RTGS) மூலம் ரூ.1.78 கோடியை பரிமாற்றம் செய்திருப்பதாக சவுத்ரி கூறினார்.

சோனிபட்டில் உள்ள சைபர் செல் காவல் நிலையத்திற்கு பொறுப்பான சப்-இன்ஸ்பெக்டர் கமல் சிங், திபிரிண்டிடம் கூறுகையில், சவுத்ரியின் புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) அடிப்படையிலான பிரிவுகளின் கீழ் போலீசார் திங்கள்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

திபிரிண்ட் சவுத்ரியை அணுகியபோது, ​​இந்த நேரத்தில் இந்த விஷயத்தைப் பற்றி உரையாட  முடியாத அளவுக்கு தான் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாக சவுத்ரி திபிரிண்டிடம் கூறினார். எவ்வாறாயினும், தான் ஒரு முன்னால் தொழிலதிபர் என்றும், ஓய்வுக்குப் பிறகு சோனிபட்டில் வசிப்பதாகவும் கூறினார்.

FIR இன் படி, முதலில், நவம்பர் 6 ஆம் தேதி தனக்கு அறிமுகமில்லாத ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாக சவுத்ரி தெரிவித்திருப்பதை திபிரின்ட் ஊர்ஜிதம் செய்துள்ளது. அவ்வழைப்பின் மறுபுறம் இருந்த நபர் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படித்திக்கொண்டு, பணமோசடி வழக்கில் சவுற்றியின் பெயர் இணைக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கின்றார். வழக்குக் கோப்பு அவரை “அசோக் குப்தா” என்று அடையாளப்படுத்தியிருப்பதாக கூறி மோசடிப்பேர்வழி சவுத்ரிக்கு ஒரு  FIR எண்ணைப் வழங்கியிருக்கி, அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவரிடம் கூறியிருக்கின்றார்.

போலி எஃப்ஐஆர் மற்றும் கைது வாரண்ட் நகல்கள் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டுள்ளன.

ஒரு உறவினரின் ஈமச்சடங்கில் பங்கேற்றிருந்தபோதே தனக்கு அவ்வழைப்பு முதன்முதலில் வந்ததாகவும், சடங்கின் பின், நவம்பர் 11 ஆம் தேதி சோனிபட் திரும்புவதாக அழைத்தவரிடம் தெரிவித்ததாகவும் சவுத்ரி கூறினார். நவம்பர் 12 அன்று, அவருக்கு இரண்டாவது தொலைபேசி அழைப்பு வந்தது, அப்போது மோசடி செய்பவர்கள் அவரை மிரட்டி, அவருடைய வங்கிக் கணக்கு விவரங்களைத் பெற்றிருக்கின்றனர் .

நவம்பர் 13 அன்று, தினசரி நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளுமாறு சவித்ரியிடம் கேட்டிருக்கின்ரார், சவுத்ரியும் அவர் கேட்டதை செய்திருக்கின்றார். பின்னர், நவம்பர் 14 க்கும் 20 க்கும் இடையில், மோசடிப்பேர்வழியின் அறிவுறுத்தலின்படி வெவேறு வங்கிக்கணக்குகளுக்கு ரூ.1.78 கோடியை அனுப்பியிருக்கின்றார்.

சவுத்ரியை மிரட்டி பணதமோசடி செய்த பின்னரும், அவர்கள், நவம்பர் 16 அன்று அவரது மனைவியை வாட்ஸ்அப்பில் அழைத்து வங்கிக் கணக்கு விவரங்களையும் கேட்டிருக்கின்றனர்.

‘பாதுகாப்பு காரணங்களுக்காக’ அம்மொசடிப்பேர்வழிகள், வயோதிப தம்பதியினரை அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி ஒரு ஹோட்டலில் தங்குமாறு அறிவுறுத்தினர். 

நவம்பர் 17 அன்று, சௌத்ரியும் அவரது மனைவியும் சோனிபட்டின் மாமா பாஞ்சா சௌக்கிற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கின்றனர். அவர்கள் அங்கு தங்கியிருந்த சமயத்தில், வீடியோ அழைப்புகள் மூலம் மொசடிப்பேர்வழிகள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்திருந்திருக்கின்றனர்.

சவுத்ரி ரூ.1.78 கோடியை மோசடியால் இழந்த பிறகுதான், தன்னையும் தனது மனைவியையும் தொடர்புகொண்டவர்கள் உண்மையான போலீசார் அல்ல, போலீசாரின் பெயரில் அவர் மிரட்டப்பட்டிருபதை அவர் உணர்ந்திருக்கின்றார். இதன்பின்னர், ஞாயிற்றுக்கிழமை அவர் காவல்துறையை அணுகி புகார் அளித்தார் என்று எஸ்ஐ கமல் சிங் கூறினார்.

தொடர்புடைய கட்டுரைகள்