மொராதாபாத்: நள்ளிரவை கடந்த ஒரு மணி நேரத்தில், ஷாஹீதீன் குரேஷி தனது மனைவி மற்றும் மகன்களிடம் விடைபெற்று, கூடுதல் பணம் சம்பாதிக்க சென்றார். அவர் உள்ளூர் சப்ஜி மண்டிக்கு சென்றதாக போலீசார் கூறுகின்றனர், அன்று இரவு சுமார் 3 மணியளவில் அவரும் அவரது கூட்டாளிகளும் இறைச்சிக்காக மாட்டை அறுத்தபோது பிடிபட்டனர். அவருடன் இருந்தவர்கள் தப்பி ஓடிய பிறகு, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு, ஷாஹிதீன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கிருந்த கும்பலால் தாக்கப்பட்டார்.
37 வயதான அவர் தாக்குதலுக்கு உள்ளான காயங்களால் மறுநாள் உயிரிழந்தார்.
“ஒரு மிருகத்தின் மரணத்திற்காக ஒரு மனித உயிரைப் பறிக்க அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? சட்டத்தை கையில் எடுக்க அவர்கள் யார், ”என்று அவரது மனைவி ரிஸ்வானா கேட்டார், அவருடைய வார்த்தைகள் சோகத்துடன் நிறுத்தப்பட்டன. “என் கணவருக்கு நடந்தது கொடுமையானது. அவர் முழுமையாக வாழ்வதற்க்கு முன்பே கொல்லப்பட்டார்.”
அவரது பிரேத பரிசோதனை அறிக்கை உடனடியாக கிடைக்காத நிலையில், ஷாஹீதீன் காயங்களால் இறந்ததாக போலீஸ் கூறுகிறது-இறப்பதற்கு முன் ஏற்பட்ட காயங்கள்

மொரதாபாத் போலீசார் ஷாஹிதீன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது உத்தரபிரதேச பசு வதை தடுப்பு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலைக்கான தண்டனையை ஒத்த பாரதிய நியாய் சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 103(1) இன் கீழ் அடையாளம் தெரியாத குற்றவாளிகளுக்கு எதிராக ஷாஹிதீனின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷாஹதீனின் சகோதரரின் புகாரின் அடிப்படையில் பிரிவு 103(1) செயல்படுத்தப்பட்டதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) சத்பால் அண்டில் தெரிவித்தார். “புகாரின் படி, தாக்கபட்டு கொலை செய்யப்பபட்டதாக கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று அவர் திபிரிண்டிடம் கூறினார்.
BNS இல், பிரிவுகள் 103(2) அல்லது 117(4) கும்பல் தாக்கிக் கொலை (lynching)-“ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து செயல்படும் குழு”, அல்லது “இனம், சாதி, பாலினம், பிறந்த இடம், மொழி, தனிப்பட்ட நம்பிக்கை ஆகிய அடிப்படையில் கடுமையான காயத்தை ஏற்படுத்துவது” போன்ற குற்றங்களை கையாள்கின்றன.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (நகரம்) குமார் ரன் விஜய் சிங்கும், இது ஒரு தாக்குதல் கொலை வழக்கு அல்ல என்று வலியுறுத்தினார். “சாதி, மதம், மதம் ஆகியவற்றால் யாரேனும் கொல்லப்பட்டால் லிஞ்சிங் என்று கூறப்படும், ஆனால் இங்கே கும்பலுக்கு அவருடைய [ஷாஹிதீனின்] மதம் தெரியாது. அப்படியானால் அதை எப்படி லிஞ்சிங் என்று சொல்ல முடியும்?”
ஷாஹிதீனைத் தாக்கும் கும்பல் ஒரு மத அவதூறுகளைப் பயன்படுத்துவதைக் கேட்கக்கூடிய வீடியோவைப் பற்றி கேட்டதற்கு, அதுபோன்ற வீடியோக்கள் எதையும் போலீசார் இன்னும் விசாரிக்கவில்லை என்று சிங் கூறினார்.
“அவரும் பல நோய்களால் அவதிப்பட்டு வந்தார், மேலும் நீரிழிவு நோயாளியாக இருந்தார், ஷாஹிதீனின் உடல்நலப் பிரச்சினைகள் அவர் உயிர்வாழும் வாய்ப்புகளைக் குறைத்தது” என்று சிங் கூறினார்.
அன்று இரவு என்ன நடந்தது
காவல்துறை மற்றும் குடும்பத்தினரின் கூற்றுப்படி, டிசம்பர் 30 அன்று அதிகாலை 1 மணியளவில் ஷாஹீதீன் தனது நண்பர் அட்னானுடன் மண்டி சமிதிக்கு செல்ல தனது வீட்டை விட்டு வெளியேறினார்.
அடுத்து என்ன நடந்தது என்பது தொடர்ந்து விசாரணைக்கு உட்பட்டது என்றாலும், மண்டி சமிதியில் வசிக்கும் கௌஷல், 3-4 பேர் கொண்ட குழு ஒரு பசுவை அறுப்பதை வணிகர்கள் பார்த்து அவர்களைத் துரத்தியதாக திபிரிண்டிடம் கூறினார். “இங்கே நிறைய மாடுகள் இருக்கின்றன. பெரும்பாலும், கசாப்புக் கடைக்காரர்கள் அவற்றைத் திருட வருகிறார்கள், ஆனால் எங்களால் யாரையும் பிடிக்க முடியவில்லை. அதிகாலை 3 மணியளவில் மண்டி திறக்கும் போது, மக்கள் ஒரு மாட்டை அறுப்பதைப் பார்த்தோம், அவர்களைப் பின்தொடர்ந்து ஓடினோம்,” என்று அவர் ஷாஹீதீன் தாக்கப்பட்ட சரியான இடத்தில் நின்று கூறினார்.
அதிகாலை 4 மணியளவில்தான் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அப்புறப்படுத்திய இடத்தில் இருந்து விலங்குகளின் எச்சங்களை மீட்டதாக தெரிவித்தனர்.

வீட்டில் ஷஹீதீனின் மனைவி மற்றும் மகன்கள் கவலையில் இருந்தனர். அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை அவருக்கு அழைப்புகள் வரவில்லை என்று அவரது மனைவி ரிஸ்வானா கூறினார். அன்று மாலை 4 மணியளவில் ஷாஹிதீனின் உடல்நிலை குறித்து போலீசார் எச்சரித்ததாக அவர் கூறினார்.
“நாங்கள் சிவில் மருத்துவமனைக்குச் சென்றோம், அவர் சி. டி. ஸ்கேன் அறையிலிருந்து வெளிவருவதைக் கண்டோம். அவர் மயக்கமடைந்து கொடூரமாக தாக்கப்பட்டார். அவரது கண்களும் காதுகளும் வீங்கி இருந்தன, விரல்கள் உடைந்து இருந்தன. அவர் மூச்சு விடவில்லை, ” என்று ஷாஹிதீனின் மைத்துனர் கூறினார், செவ்வாய்க்கிழமை அதிகாலை காயங்களால் அவர் இறப்பதற்கு முன்பு அவர்கள் அவரை சிகிச்சைக்காக இரண்டு மருத்துவமனைகளுக்கு மாற்றினர்.
ஷாஹிதீன் தாக்கப்பட்ட மண்டி சமிதி பகுதியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் நகரின் வளர்ந்து வரும் பித்தளைத் தொழிலில் ஒரு தொழிலாளியாக பணியாற்றினார். அவரது நீரிழிவு நோயைக் கையாள்வது கடினமாக இருந்ததாக குடும்பத்தினர் கூறினர்-அவரது மகன்கள் அர்ஹம் (15) அஃபி (13) மற்றும் ஹிர்சான் (10) பள்ளியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

” 500 ரூபாய் சேர்த்து சம்பாதிக்க ஷாஹிதீன் இரவில் வேலைக்குச் சென்றார்” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு உறவினர் கூறினார். மேலும், “அவர் தனது குடும்பத்திற்கு உணவளிக்க வேண்டியிருந்தது” என்றும் கூறினார். அன்று இரவு ஒரு டிரக்கை ஓட்ட ஷாஹிதீனை அவரது நண்பர் அட்னான் பணியமர்த்தியதாகக் கூறப்படுகிறது, அவர் இருக்கும் இடம் தெரியவில்லை.
ஷாஹிதீன் ஒரு முஸ்லீம் என்பதால் கொல்லப்பட்டதாக ஒரு உறவினர் கூறினார். “இந்த கொலை பசு வதை சட்டபூர்வமானது பற்றியது அல்ல. அவர் ஒரு முஸ்லீம் என்பதால் கொல்லப்பட்டார்” என்று கூறினார்.
அதிர்ச்சியால் முகம் வாடியிருந்த மூத்த மகன், குடும்பத்தினர் நீதிக்காக காப்பதாக கூறினார். “அவருக்கு (ஷாஹிதீன்) என்ன நடந்ததோ அது (தாக்குதலின்) குற்றவாளிகளுக்கு நடக்க வேண்டும்”.