புது தில்லி: உடல்நலக் குறைவு காரணமாக துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் திங்கள்கிழமை பதவி விலகினார். ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், “மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அவசியத்திற்காக,” தான் பதவி விலகுவதாகத் தெரிவித்திருக்கின்றார்.
“உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், அரசியலமைப்பின் பிரிவு 67(a) இன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்திய துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,” என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வெங்கையா நாயுடுவுக்குப் பிறகு, தங்கர் ஆகஸ்ட் 11, 2022 அன்று பதவியேற்றார்.
ஜனாதிபதி திரௌபதி முர்முவின்” நிகரற்ற ஒத்துழைப்பிற்கும், எளிமையான, அற்புதமான பணி உறவுக்கும்” அவர் தனது கடிதத்தில் நன்றி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமைச்சர்கள் குழுவிற்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார், அத்துடன், பிரதமரின் ஆதரவை “விலைமதிப்பற்றது” என்றும், தான் பதவியில் இருந்த காலத்தில் “நிறைய கற்றுக்கொண்டார்” என்றும் குறிப்பிட்டிருக்கின்றர்.
“மாண்புமிகு பிரதமருக்கும், மதிப்பிற்குரிய அமைச்சர்கள் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் விலைமதிப்பற்றவை, மேலும் நான் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று 74 வயதான அவர் எழுதியிருக்கின்றார்.
“அனைத்து மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் நான் பெற்ற அந்நியோன்யம், நம்பிக்கை மற்றும் அரவணைப்பு என்றென்றும் நீங்காமல் என் நினைவில் பதிக்கப்படும்” என்று தன்கர் கூறியுள்ளார். “நமது மாபெரும் ஜனநாயகக் குடியரசின் துணை ஜனாதிபதியாக நான் பெற்ற ஒப்பற்ற அனுபவங்களுக்கும் ஆழ்ந்த ஞானத்திற்கும் நான் மிகவும் கடமைப் பட்டிருக்கின்றேன்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் பிரம்மாண்டமான பொருளாதார முன்னேற்றத்தையும், ஈடிணையற்ற அசாதாரண வளர்ச்சியையும் கண்கூடாக பார்த்ததையும், அதில் தான் பங்கேற்றுகொண்டதையும் “திருப்தியளிக்கும் கௌரவமாகவும்” கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், “இந்திய தேச வரலாற்றின் பரிணாம யுகத்தில் பணியாற்றியதற்காக பெருமிதப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
“இந்த மதிப்புமிக்க பதவியை விட்டு நான் விலகும்போது, இந்தியாவின் உலகளாவிய எழுச்சி மற்றும் தனித்துவமான சாதனைகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன், மேலும் அதன் அற்புதமான எதிர்காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
அதேநாளில், முன்னால் ராஜ்யசபா தலைவரான தன்கர், அனைத்து அரசியல் கட்சிகளும் பரஸ்பர மரியாதையை நிலைநிறுத்தவும், “தொடரும் கசப்புணர்வுகளைத்” தவிர்க்கவும் கோரிக்கை விடுத்தார், சாந்தமடையாத விரோதங்களுக்கு மத்தியில் ஒரு செழிப்பான ஜனநாயகம் செயல்பட முடியாது என்று எச்சரித்தார்.
திங்கட்கிழமை மாநிலங்களவை நடவடிக்கைகள் தொடங்கியபோது தனது தொடக்க உரையில், ஆத்மார்த்த உரையாடல், அறிவார்ந்த விவாதங்கள், ஆழ்ந்த சிந்தனை முடிவுகளே இந்தியாவின் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க பல, இதுவே மக்களவைத் தலைவர்கள் உறையும் பாராளுமன்றத்தை வழிநடத்தும் என்றும் கூறியிருக்கின்றார்.
14வது குடியரசு துணைத் தலைவராக பதவி உயர்த்தப்படுவதற்கு முன்பு, தங்கர் மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றியுள்ளார். 1989 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ஜுன்ஜுனு தொகுதியிலிருந்து 9வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரானார். 1993 ஆம் ஆண்டு கிஷன்கரில் இருந்து ராஜஸ்தான் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.