புதுடெல்லி: பல ஷெல் நிறுவனங்கள் மற்றும் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய மிகப்பெரிய சைபர் மோசடியின் சூத்திரதாரி என பட்டயக் கணக்காளரான அசோக் குமார் சர்மாவைக் அடையாளம் கண்டதையடுத்து, வியாழனன்று, அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் குழு, டெல்லி பிஜவாசன் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சோதனை நடத்தியது.
அதிகாரிகள் உள்ளே நுழைந்ததுமே, சர்மாவும் அவரது சகோதரரும் மர நாற்காலிகளை அதிகாரிகளின் மீது வீசித்தாக்கிவிட்டு தப்பினர். இந்த சம்பவத்தில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர்.
வேலைகள் மற்றும் முதலீடுகள் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு நிதியை மாற்றியதற்காக CA வும் அவரது சகோதரரும் மத்திய புலனாய்வு அமைப்பபின் கண்கானிப்பின் கீழ் இருந்தனர்.
இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவின் (FIU-IND- Financial Intelligence Unit-India) தகவல்களின் தரவூட்டல்கள் மூலம் கண்டறியப்பட்டு, இதன் தன்மைகள் மற்றும் பாதிப்பளவுகளை கருத்தில் கொண்டு, அமலாக்க இயக்குனரகம் இவ்வழக்கினை மிக அசாதாரணமான ஒன்றாக கருதுகின்றது.
“மோசடி செய்யப்பட்ட நிதியை பெற்றுக்கொள்ளவும் அவற்றை இந்தியாவிற்கு வெளியே பரிமாற்றுவதற்கும் அதிகளவான அளவில் சட்டவிரோத கணக்குகளைப் பயன்படுத்துவது பற்றிய தகவல்களை FIU இலிருந்து நாம் பெற்றுக்கொண்டோம். ஆழ்ந்த பகுப்பாய்வு இத்தகைய கணக்குகளின் எண்ணிக்கை 1,000-1,500 வரை இருக்கலாம் என்று ஊர்ஜிதப்படுத்துகின்றது” என்று ஒரு அமலாக்க இயக்குனரக அதிகாரி திபிரிண்டிடம் கூறினார்.
நிதி புலனாய்வு பிரிவு (FIU) என்பது நிதி பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் திரட்டுதல், முறைப்படுத்துதல், மற்றும் பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தும் ஒருங்கினைக்கப்பட்ட மத்திய முகவராண்மையகமாகும், மேலும் திரட்டப்பட்ட நிதிக்கணக்குகளில் சந்தேகத்திற்குரிய கணக்குகளை அமலாக்க முகவர் மற்றும் அவர்களின் வெளிநாட்டு சகாக்களுக்கு தெரியப்படுத்தும் முகவராகவும் செயற்படுகிறது.
அமலாக்க இயக்குனரக அதிகாரியின் புகாரின் அடிப்படையில், ஷர்மா மற்றும் அவரது சகோதரர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 221 (பொது ஊழியரை பணி செய்ய விடாமல் செய்தல்), பிரிவு 132 (சினமூட்டலற்ற நபர்மீதான தாக்குதல் அல்லது வன்முறை), 121 (1) (பொது ஊழியரை தனது கடமையிலிருந்து தடுக்கும் வகையில் தானாக முன்வந்து காயம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), 351 (3) (குற்றம் சார்ந்த மிரட்டல்), மற்றும் 3(5) (பொது நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் (தென் மேற்கு டெல்லி) சுரேந்திர சவுத்ரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக யாஷ் என்ற ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளதாக DCP தெரிவித்தார். குற்றச் செயல் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் இருந்த ஷர்மாவின் உறவினர் அவர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
200 ஷெல் நிறுவனங்கள்
அமலாக்க இயக்குனரகதின் ஆதாரங்களின்படி, CA மற்றும் அவரது சகோதரர் கிட்டத்தட்ட 200 ஷெல் நிறுவனங்களின் இயக்குனர்களாக இருந்தனர், இது வேலை வாய்ப்பு அல்லது முதலீட்டு வாக்குறுதிக்கு ஈடாக பொதுமக்களிடமிருந்து பணம் பெற பயன்படுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின் “சூத்திரதாரி” சர்மா என்றும், அதன் கீழ் அவர்கள் போலியான சலுகைகளுடன் விளம்பரங்கள் மற்றும் விளம்பர இடுகைகளை பரப்பியதாக அதிகாரிகள் மேலும் விளக்கினர். “அவர்கள் ரூ. 1,000 முதல் பல ஆயிரங்கள் வரை விண்ணப்பக் கட்டணங்களாக வசூலித்து, இவ்வசூலை மோசடி கணக்குகளில் டெபாசிட் செய்யதனர்” என்று ஒரு அமலாக்க இயக்குனரக அதிகாரி விளக்கினார்.
சர்மாவும் அவரது கூட்டாளிகளும் ஒரு விண்ணப்பத்தை தயாரித்திருந்தனர், அவ்விண்ணப்பத்தில் மக்கள் தங்கள் அனைத்து விவரங்களையும் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வேலைகள் என்ற பெயரில் மக்களிடமிருந்து பணத்தை ஈர்ப்பதைத் தவிர, இந்த “CAகளின் சிண்டிகேட்” ‘கற்பனைக்கெட்டாத’ அதிக வருமானம் என்று ஏமாற்றி முதலீடுகளைப் பெறுகிறது’, என்று அவர்கள் கூறினார்.
தொகுதியில் பணிபுரியும் நபர்கள் போலியாக உருவாக்கப்பட்டிருந்த சட்டவிரோத கணக்குகளுக்கான ATM-கம்-டெபிட் கார்டுகளை, அபுதாபியைச் சேர்ந்த கட்டணத்திரட்டியான Pyyplக்கு வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மாற்றுவதற்கு வசதியாக பெற்று வைத்திருந்தனர்.
“பொதுமக்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட நிதிகள் Pyypl கட்டண செயலி மூலம் அனுப்பப்பட்டு, திர்ஹாமில் திரும்பப் பெறப்பட்டு, பின்னர் கிரிப்டோகரன்சிகள் மற்றும் பிற முதலீட்டுகளை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது” என்று அதிகாரி ஒருவர் திபிரிண்டிடம் கூறினார்.
Pyypl 2017 இல் வரையருக்கப்பட்டு, ADGM அபுதாபி உலகச் சந்தையின் (ADGM-Abu Dhabi Global Market) பொதுப் பதிவேட்டின் நிதிச் சேவைகள் ஒழுங்குமுறை ஆணையத்தால் (FSRA-Financial Services Regulatory Authority)கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருப்பதாகக் சொல்லப்படுகிறது.
சர்மா மற்றும் பிற CAக்கள் செய்த மோசடி தொடர்பான வழக்குகள் உள்ளன, அவற்றில் ஒன்று மத்திய புலனாய்வுப் பிரிவின் வழக்குகள் என்று அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர். மோசடியை நடத்தும் நோக்கத்திற்காக அவர் பயன்படுத்திய கணக்குகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் ஏஜென்சி அவரையும் அவரது இருப்பிடத்தையும் துள்ளியமாக கணித்தது.
ஷர்மாவின் பண்ணை வீட்டில் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், ஆவண நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட PAN கார்டுகள் மற்றும் ரப்பர் முத்திரைகள் அடங்கலாக, போலி கணக்குகளின் ATM கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் போன்ற குற்றவியல் பொருட்களை ஏஜென்சியால் மீட்க முடிந்தது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.