புது தில்லி: அஜ்மீரில் உள்ள அனா சாகர் ஏரியைச் சுற்றியுள்ள ஏழு உலக அதிசய பூங்காவை மறுவடிவமைக்க ராஜஸ்தான் அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது, மேலும், ஆறு மாத கால அவகாசத்தினுள் அங்கிருக்கும் பிரதிகளை வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது இடிக்கும்படியாக அம்மாநிலத்திற்கு கெடு கொடுத்திருக்கின்றது.
தினமும் சுமார் 2,500 பார்வையாளர்களை ஈர்க்கும் பூங்காவை மேம்படுத்துவதில் ஏற்கனவே ரூ.12 கோடி முதலீடு செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்த வாதத்தை நீதிபதி அபய் எஸ். ஓகா தலைமையிலான அமர்வு நிராகரித்தது. ஏரியைச் சுற்றியுள்ள பகுதி முற்றிலுமாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும், ஏழு பிரதிகளயும் இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது இடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏழு அதிசய பூங்காவின் கட்டமைப்புகள் மற்றும் பாதைகள் ஸ்மார்ட் சிட்டி மிஷனின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு அவை தற்போது பொது பயன்பாட்டில் இருப்பதாக அரசு வாதிட்டது.
இதற்கிடையில், அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஷிவ் மங்கல் சர்மா ஆகியோர், அனா சாகர் ஏரியை பாதுகாக்கப்பட்ட ஈரநிலமாக அறிவிக்கும் தமது தீர்மானத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 2017 ஆம் ஆண்டு ஈரநில (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் கீழ் இந்த மனிதரால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரியை ஈரநிலப்பகுதியாக அறிவிக்கும் செயல்முறைக்கு ஆறு மாதங்கள் ஆகும் எனவும் நீதிமன்றத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
ஏரியைச் சுற்றியுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றுவதற்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) உத்தரவை மாநிலம் பின்பற்றத் தவறியதற்காக முந்தைய விசாரணையில் உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 2023 இல், ஏரியை ஒட்டிய வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து பசுமை நீதிமன்றம் தமது கருத்துக்களை கூறி, கட்டுமான நடவடிக்கைகள், ஏரியின் சுற்றுச்சூழல் சமநிலையை சீர்குலைப்பதாக எச்சரித்தது.
NGT படி, இந்த கட்டுமானம் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் 2017 ஈரநில விதிகளை மீறுவதாகும். ஏழு அதிசய பூங்கா, படேல் மைதானம், காந்தி ஸ்மிருதி உதயன் மற்றும் ஏரியைச் சுற்றி கட்டப்பட்ட உணவு அரங்கத்தை உடனடியாக இடிக்க உத்தரவிடப்பட்டது.
ராஜஸ்தான் அரசு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதும், டிசம்பர் 2023 இல், உச்ச நீதிமன்றம் தடையுத்தரவிடுவதற்கு மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் வழக்கைத் தொடர்ந்தபோது, NGT உத்தரவை நிறுத்தி வைப்பதற்கு எதிரான தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், அதை நிறைவேற்ற மாநிலத்திடம் உத்தரவாதம் கோரியது.
இடைக்கால தடையுத்தரவு கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தும், மாநிலம் செய்யவேண்டிய கடமைகளை நினவுறுத்திய பின்னரும், ராஜஸ்தான் அரசு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நெறிப்படுகளை கடைப்பிடிக்க தவறியதற்காக நிதியரசர்மர்வு, தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. ஆகையால், மாநில தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், ஏரியை ஈரநிலமாக பிரகடனப்படுத்த ஒரு விரிவான ஆவணத்தைத் தயாரிக்கும் ஆணைக்குழுவை அமைப்பது சார்பக குறிப்ப்பிடப்பட்டுள்ளது. மேலும், உணவு அரங்கம் இடிக்கப்பட்டதற்கான விவரங்கள் மற்றும் ஓடுகளால் மூடப்பட்டிருக்கும் நிலப்பகுதிகளை பசுமையான இடமாக மாற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்த விவரங்களும் பிரமாணப் பத்திரத்தில் உள்ளன.
இருப்பினும், அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகத்தை தற்போதைய இடங்களில் வைத்திருக்க அனுமதிக்குமாறு அரசு நீதிமன்றத்தை வலியுறுத்தியது. மகாத்மா காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாக இந்த அரங்கம் செயல்படுகிறது என்றும், அவரது சித்தாந்தத்தைப் பரப்பும் மாதிரிகள் இடம்பெறுகின்றன என்றும் அது வாதிட்டது.
அரங்கத்தைப் பொறுத்தவரை, இந்த வளாகம் சுமார் 60,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள போலோ மைதானத்தின் ஒரு பகுதியாகும் என்று அரசு தெளிவுபடுத்தியது. சுமார் 1,880 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த அரங்கம், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டதாகும். இம்மைதான அரங்கமைப்பு, தற்போதிருக்கும் நிலத்தோற்றத்துடன் இசைவதாக, புல்வெளி டென்னிஸ் மைதானம் மற்றும் நீச்சல் குளம் அடங்கியதாக பொதுமக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக இமைந்திருக்கின்றது.
கூடுதல் கோரிக்கையாக, ஏரியின் எல்லையில் கட்டப்பட்ட ஓட்டுக்கற்களால் ஆன பாதையை தக்க வைத்துக் கொள்வதற்கு நீதிபதியின் அனுமதியை அரசு கேட்டிருந்தது. ஏரியைப் பாதுகாக்க இந்தப் பாதை கட்டப்பட்டுள்ளது என்றும், இயற்கையான நீர் வரத்து மற்றும் வெளியேற்றத்தை எளிதாக்க போதுமான துளைகளை உள்ளடக்கியது என்றும் அது வலியுறுத்தியது.
உச்ச நீதிமன்றம் இந்த மூன்று கட்டமைப்புகள் குறித்தும் திங்கட்கிழமை, விவாதிக்காத போதும், அவை சம்பந்தப்பட்ட , ஆனால் அவற்றை நிவர்த்தி செய்ய ஏப்ரல் 7 ஆம் தேதி விசாரணையைத் திட்டமிட்டது.
மேலும், ஏரியின் தூய்மையை தொடர்ந்து பராமரிக்கவும், அதன் நீர் தரத்தை மேம்படுத்தவும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த நுண்ணறிவுகளை பிரமாணப் பத்திரம் வழங்கியது. இதற்காக, அஜ்மீர் நகராட்சி, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை தொழில்நுட்ப உதவிக்காக ஈடுபடுத்தியுள்ளது.
மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (MNIT) குழுவும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க நியமிக்கப்பட்டுள்ளது.