scorecardresearch
Monday, 15 December, 2025
முகப்புதேச நலன்வியூக ஆலோசகராக ஒருநாள், சிம்ம சொப்பனமாக மறுநாள்: ‘டிரம்ப்லோமசி’ஐ சிரமத்துடன் கற்றுக்கொள்ளும் இந்தியா.

வியூக ஆலோசகராக ஒருநாள், சிம்ம சொப்பனமாக மறுநாள்: ‘டிரம்ப்லோமசி’ஐ சிரமத்துடன் கற்றுக்கொள்ளும் இந்தியா.

பொதுவில் வெளிப்படை, குரலில் பகிரங்கம், எதிர்வுகூரலில் தைரியம், அநாகரீக முரட்டுத்தனத்துடன் அதிகப்படியான பாராட்டு, அதிலும் பூடகமான சாடல். இதுதான் நாம் கூறும் ‘டிரம்ப்லோமசி.’ எதுவானபோதும், நோக்கம் ஒன்றுதான்: அமெரிக்க ஏகாதிபத்யம்.

சம்பிரதாய இராஜதந்திர வழிகளை சிதைக்கும் வழிகளை டொனால்ட் ட்ரம்ப் கையில் எடுத்திருக்கின்றார். இந்தியா, இன்னும் சொல்லப் போனால் மோடியின் அரசு இவருடைய இத்தகைய விதண்டா வாதங்களின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

அவர் மத்தியஸ்தம் செய்ததே சிந்தூர் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு வர காரணம் என தற்பெருமை பேசிக்கொண்டிருப்பது சமாளிபது ஒரு திண்டாட்டமாக இருப்பது ஒருபுறமிருக்க, ‘ஐந்து ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன’ என்ற புதிய கருத்து இன்னும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. 

‘தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட்’ அமைப்பை, ‘லஷ்கர்-ஏ-தொய்பா’ அமைப்பின் கீழ் இயங்கும் பினாமி என்றும், பஹல்காம் மனிதப் படுகொலையின் பொறுப்பாளியாகவும் அடையாளப்படுத்தி, அதனை வெளிநாட்டு பயங்கரவாத இயக்கமாக டிரம்ப் அரசு அறிவித்தது, இந்தியாவுக்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக கருதப்பட்டபோதும், அதற்கடுத்த நாளே டிரம்பினால் கட்டவிழ்த்துவிட்ட குழப்பங்கள்.

ஒன்றுக்கொன்று முரணான இத்தகைய அறிவிப்புக்களை எப்படி ஏற்றுக் கொள்வது? ஒருவகையில் கேந்திர முக்கியத்துவமுடைய பங்களிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை செயற்படுத்தும் அதே சமயம் அவர்களை ஊதாசீணப்படுத்தும் வகையில் நடந்துகொள்வதும் அவருடைய நடைமுறைப் பாணியாக இருக்கின்றது. ‘டொனால்ட் ட்ரம்ப்’ போன்ற ஒரு பிரச்சினையை சமாளிப்பது எப்படி? உலகம் முழுவதும் பரவலான கேள்வியாக இது மாறியிருக்கின்றது. இந்தக் கேள்விக்கு விடை சொல்வதற்கு முன்னர், நடப்புச் சம்பவங்களை தெளிவாக புரிந்து கொள்ள முயல்வோம்:

அமெரிக்காவை மகத்தானதாக்கும் பெயரில், ‘டொனால்ட் ட்ரம்ப்’ முடங்கிக்கிடந்த உலகலாவிய அமெரிக்க எதிர்பலைகளை உசுப்பி உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றார். ஒரே சமயத்தில் தன் நாட்டினதும், நேசநாட்டினதும், எதிரிகளுடன் நயமாக உறவாடிக்கொண்டு, நேச நாடுகள் சங்கடப்படுமளவு பகிரங்கமாக பரிகாசம் செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றார். 

எமக்கு, இந்தியாவில், பாக்கிஸ்தானுடனான போர் நிறுத்தம் தன் தலையீட்டாலும் அணுசரணையாளுமே சாத்தியப்பட்டது என்ற அவருடைய தொடர்ச்சியான பகிரங்க பெருமைய விளம்பரங்கள், நீர்த்துப்போன காயங்களை கீறிவிடுவதற்கு ஒப்பானதாகும். இடது சாரிகளும், மோடி எதிர்ப்பாளர்களான கூட்டச் சூழலும், மோடி அரசை எள்ளி நகைக்கவும், வீழ்ச்சி என கருதி கொண்டாடவும் ஆரம்பித்துவிட்டனர்: சாத்தானுடைய சேர்க்கையில் நீங்கள் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்? யாருக்குத்தெரியும்? இந்த வருட இறுதியில் கூடவிருக்கும் ‘சதுரக சந்திப்பு’ மாநாட்டில் கலந்துகொள்ள வரும் வழியில் பாக்கிஸ்தானுக்குச் சென்று வரக் கூடும் (சொற்ப வாய்ப்புக்களே இருந்தாலும், நடக்காது என்று சொல்ல முடியாது). அவரைப் பொறுத்தவரை பாரம்பரிய ராஜதந்திரக் கோட்பாடுகள் செல்லாக் காசுகள். வெந்த புண்னில் வேல் பாய்ச்சுவது போல் இந்தியா விசனப்பட்டாலும், அது இந்தியாவின் பிரச்சினை. அவருக்கு உத்தரவிட அதிகாரமில்லை!

குறைந்த பட்சம் நான்கு முறையேனும், நரேந்திர மோடியையும், ஃபீல்ட் மார்ஷல் அசீம் முநீரையும் பற்றி ஒரே சமயத்தில் பேசியிருக்கின்றார். இறுதியாக, ஜீன் 19ஆம் தேதி அளித்த உரையில், பாகிஸ்தானிய சேனைத்தளபதி சாதூர்யமான மனிதர், வெள்ளை மாளிகை விருந்தில் கலந்துகொண்டார், அவ்வாறே பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர், என் உற்ற நண்பர் என்று பலவாறு கூறியிருக்கின்றார்.

பாகிஸ்தானுடன் எம்மை இனைத்துப் பேசுவது, எங்களைப் புண்படுத்துவதற்கு ஒப்பானதான கருதி மனச்சோர்வடையச் செய்கின்றது. இப்போது மோடியை முநீருடன் தொடர்பு படுத்திப் பேசுகின்றார். என்னக் கொடுமை! ஒருகணம் நிதானித்து, அமைதியாக, சிறு சிந்தனைக்குப் பின் ஒரு சிரிப்பு! எனக்கவசியம். டிரம்ப் முநீரை மோடியுடன் இணைக்க முயன்றால், அதிகமாக குமுறவேண்டியவர் யார்? முநீருக்கு ஐந்தாவது நட்சத்திரத்தையும், மார்ஷல் என்ற அங்கீகாரத்தையும் வழங்கிய பரிதாபமான பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் அல்லவா? குறைந்த பட்சம், அரசியல் சாசணத்திற்கு கொஞ்சமாவது மதிப்பளிக்கும் வகையில், ஆவணங்களுக்காகவேணும், ஒரு ஃபீல்ட் மார்ஷல் பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிக்க கடமைப்பட்டிருக்கவேண்டாமா?

சிந்தூர் நடவடிக்கை அனுசரணையின் போதும் (மத்தியஸ்தம், தலையீடு என்ற சினமூட்டும் வார்த்தைகளுக்கு மாற்றாக நான் விரும்பும் வார்த்தை), ஷாரிஃப் தேசியச் செயளாலர் மர்கோ ரூபியோவிடமிருந்தே தகவல்களைப் பெற்றுக் கொண்டார். அவருக்குச் சமமான இந்தியப் பிரதிநிதி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர். இந்த இடைத்தொடுப்பில் குமுறவேண்டிய நபர், ஷரிஃப், ஆனால் அவர் அதற்கு ஒருபோதும் முயற்சிக்க மாட்டார். டிரம்பைப் போல், பாகிஸ்தானின் உண்மை முகத்தை இதுப்போல் நிதர்சனமாகவும் உறுதியாகவும் வெளிச்சமிட்டுக் காட்ட ஒருவராலும் முடியாது.

ஆத்திரப்படாமல் அமைதியாக சிந்தித்துப் பாருங்கள். பல தசாப்தங்களாக பாகிஸ்தானில் ஜனநாயகம் வெறும் கேலிக்கூத்து என்றும், அதன் அசைக்கமுடியாத அதிகாரம் இராணுவத்திடம் இருக்கின்றது என்ற உண்மையை இந்தியா கூறிவந்தது. பாகிஸ்தானுடனான சுமூகப் பந்தியிலும், டிரம்ப்பின் நிலைப்பாடு அப்பட்டமாக இருந்திருக்கின்றது. ஒருவகையில், அவர் நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்கின்றார், உங்கள் ஆழ்மன எண்ணங்களை சத்தமாகக் கூறுகின்றார். ட்ரம்ப்பிற்கு முன்னர் பதவி வகித்த அமெரிக்க அதிபர்கள் ஒன்றும் அறியாதவர்கள் என்றாகிவிடாது, அவர்களுக்கு யதார்த்தம் தெரிந்தும், பெருந்தன்மையாக பாகிஸ்தானில் மக்களாட்சியை மீண்டும் உருவாக்கி அதனை மேம்படுத்தவே இத்தனைத் தசாப்தங்களாக முயன்றனர்.

அந்தப் பழைய பஞ்சாங்கமெல்லாம் ட்ரம்ப்பின் நம்பகமான அடித்தளத்தைக் கட்டியெழுப்பும், விருப்பு வார்த்தைக்கான X/ட்ருத்சோஷல் கதைக் களங்கள் – “புல்ஷிட்.” அவரிடம் ஒளிவுமறைவில்லை, அனைத்துமே வெளிப்படை, அநாவசிய ‘புல்ஷிட்’ இல்லை. என்னவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், எந்த தேசத்து எதிர்ப்பக இருந்தாலும் அவர் அதனை எதிர்கொள்வார். காலப் போக்கில், இந்தியாவும் இதே பாணியை கற்றுக் கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. 

டிரம்பின் இத்தகைய குழறுபடியான, சரிவர எழுத்தப்படாத, சமூக ஊடகங்களில் உணர்வுகளை வெளிப்படையாக கொட்டித்தீர்க்கும், இலக்கணமும் எழுத்துப் பிழையும் நிறைந்த அரசியற் செயற்பாடுகளுடன், நமது UPSC முதல்நிலைத் தேர்வுகளில் கூட தேர்ச்சியடைய மாட்டார். அவரைப் பொருத்தவரை, இவ்வளவு சலுகைகளும் சமயோசிதங்களும் ராஜதந்திர உறவுகளுக்கு வழங்கப்பட அவசியமேதுமில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் உண்மையற்ற நடிப்பும், நயமும், நாகரீக நடத்தைகளும் அர்த்தமற்றவை.

இதன் விளைவு, அவரால் இரகசியத்தை இரகசியமாக வைத்திருக்க முடியாது. இதற்கு ஒரு உதாரணமாக, NATO செயலாளர் நாயகம் (முன்னால் டச்சுப் பிரதமர்) மார்க் ரூட்டெ அவருக்கு அனுப்பிய அசாதாரண முகஸ்துதியை பிரதியெடுத்து, பொதுப்பார்வைக்கு வெளியிட்டார். இது ஐரோப்பியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவருக்கு வேண்டியது அதுவே: பிரமிப்பும் மலைப்பும். உலகம் அவருடைய ஆற்றலையும், அமெரிக்காவின் ஆதிக்கத்தையும் உணரவேண்டும், அங்கீகரிக்க வேண்டும். ரூட்டே தன் குறிப்பில் “நேட்டோ தலைவர்கள் ட்ரம்பை “தந்தை’ என்ற ஸ்தாணத்தில் கொண்டு நடக்க வேண்டும் என்று எழுதியது அண்டிப்பிழைக்கும் அடிமைத்தனத்தின் உச்சகட்டம்.

வேதனை உங்களை வருத்தும் சமயங்களில், அவர் தன் நெருங்கிய சகாக்களை நடத்தும் விதத்தைப் பாருங்கள். கனடாவை அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக தீர்வைகளற்ற, குறைந்த வரிச் சலுகைகளுடன் இணைத்துக்கொண்டு, “ரஷ்ய, சீன கப்பல்கள் அவர்களுடைய கரைகளை சூழ்ந்து கொள்வதிலிருந்து” பூரண பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள அழைக்கின்றார். ஆளுநர் ‘ஜஸ்டின் ட்ரூடோவை அழைத்து, 51வது மாநில எண்ணத்தை கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னிக்கு மீண்டும் கூறியிருக்கின்றார். அவர் ஒருபோதும் முடியாது என்றதற்கு, “முடியாதென்று ஒருபோதும் சொல்லக் கூடாது (நெவர் சே நெவர்) என்று பதிலளித்திருக்கின்றார். எண்ணிப்பாருங்கள், மோடிக்கருகில் அமர்ந்துகொண்டு, காஷ்மீருக்கான ஆயிரங்கால போராட்டத்தை நீங்கள் கைவிட வேண்டும், ஆளுக்கொரு பகுதியை வைத்துக் கொண்டு, சந்தோஷமாக இருக்கப் பழகுங்கள்! கட்டுப்பாட்டுச் சாசன நேசநாடான, கனடாவுகே மோசமான பிரேரணைகளை கொடுத்தவர்!

டிரம்ப், பாரம்பரிய ராஜதந்திர உறவுகளுக்கு எதிரான கிளர்ச்சியாளர். ஹமாஸ் போரை நிறுத்த வேண்டும் என்று அவர் விரும்பியபோது, காஸா பள்ளத்தாக்கு அமெரிக்காவிற்கு பரிசாக வழங்கப்படும், அவர் அந்தப் பள்ளத்தாக்கில் ஒரு ஆடம்பரமான உல்லாச நகரை நிர்மானிப்பார் என்று கூறினார். அத்தோடு நிற்காமல், AI தொழிநுட்பத்தின் உதவியுடன், கடற்கரையில் ஓய்வெடுப்பது போன்ற ‘மீம்ஸ்’ களை சமூக வலைதலத்தில் பரப்புகின்றார். இஸ்ரேல் தாக்குதல்கள் உச்சத்திலிருக்கும் போதே, ஈரனுடன் பேச்சுவார்த்தைகளில் நடத்திக் கொண்டிருக்கையில், அவரே வளைகுடாப் பிராந்தியத்தில் அமெரிக்க குண்டுவீச்சுக்களுக்கு இடம்கொடுத்தார் – தாக்குதலின் பரபரப்பில் தனக்கும் பங்கு வேண்டுவது போல!

ஈரானியர்களுடன் நட்பாக கையசைத்து, தன் நெருங்கிய சகாவான இஸ்ரேலின் தாக்குதல் விமானங்களை மீள அழைக்க கட்டளையிடுகின்றார். சவுதி அரேபியர்களையும் கூட்டு சேர்க்க ஆபிரகாம் ஒப்பந்தங்களை விரிவுபடுத்தும் எண்ணத்தில் மீண்டும் ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முனைகின்றார். 

வெளிப்படையாக உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கீயை பரிகாசம் செய்கின்றார், கைவிட்டதுபோல நடந்துகொள்கின்றார், உக்ரெய்னின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள கனிம ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்க வற்புறுத்துகின்றார். நேட்டோவை மிரட்ட ரஷ்ய அதிபர் புட்டினை புகழ்கின்றார், பின் அவருடன் மனஸ்தாபமடைகின்றார். தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய நிதியைப் பயன்படுத்தி, ‘பாட்ரியொட் ஏவுகணைகள்’ போன்ற புதிய ரக ஆயுதக் கொள்வனவுச் செலவுகளை ஐரோப்பாவுக்கு ஏற்படுத்துகின்றார். இந்த ஆயுத ஒப்பந்தம், கலவரமேதுமின்றி, ஜோ பைடன் இறுதியாக முடிவு செய்த ஒரு உடன்பாடு.

பொருள் ஒன்றுதான், மார்க்கம் முற்றிலும் மாறுபட்டிருக்கின்றது. இதைத்தான் நாம் “டிரம்ப்லோமசி” என்று கூறுகின்றோம். பொதுவில் வெளிப்படை, குரலில் பகிரங்கம், எதிர்வுகூரலில் தைரியம், அநாகரீக முரட்டுத்தனத்துடன் அதிகப்படியான பாராட்டு, அதிலும் பூடகமான சாடல். அமெரிக்க ஏகாதிபத்ய எண்ணமே அவருடைய பெரிய நேக்கம். இதற்காகவே அவருடைய அடிவருடிகளை அவர்மிது அதீத நம்பிக்கையுடன் இருக்கின்றனர். சமீபகால முறுகல்கள் உள்நாட்டு சச்சரவுகள் – எஃப்ஸ்டீன் கோப்புக்களை வெளியிட மறுத்ததற்கான உள்நாட்டு எதிர்ப்பலைகள்.

அமெரிக்காவின் நண்பர்கள் ஏமாற்றப்பட்ட காதலர்களைப் போல அவரை ஒதுக்கித் தள்ள முடியாது. அவர்களுக்கு அமெரிக்கா அவசியம் தேவை. இந்த வாரத்தில் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ ஐரோப்பியர்கள் எவ்வாறு அவருடைய நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர் என்பது பற்றிய ஒரு அற்புதமான செய்தியை வெளியிட்டது: குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பரிசளித்தல், அவமதிக்கப்பட்டபோது, புன்னகைத்து விலகுதல், அதிகபட்ச முகஸ்துதி, அதுவே அவருடைய நட்பைப் பெற்றுக் கொள்ள எளிய வழிகள். ஆனால் அவரது எதிரிகள், திகைத்துப் போய், அடுத்த நடவடிக்கைக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. 

சீனா போன்ற போதுமான கனிம வளங்களைக் கொண்ட நாடுகள், அமைதியாக இருக்கின்றன. உக்ரெய்னில் சமாதானமோ சச்சரவோ, 500 சதவீதமாக இல்லாவிட்டாலும், அசாதாரணமான தீர்வைகளை உருவாக்கி, டிரம்பால் அவர்களை எதுவும் செய்ய முடியாது என்ற உண்மை அவர்களுக்குத் தெரியும். அவுஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா அவர்களின் நிலைகளை ஸ்திரப்படுத்திக் கொள்கின்றனர். இந்தியா நிர்ணயித்துக் கொள்ள வேண்டும், ஒருவேளை, நீண்டகாலமாக புரையோடிய இருநாடு வழக்கங்கள் புறக்கணிக்கப்பட்டு, வழியில் பாக்கிஸ்தானுக்கு அவர் செல்வதாக இருக்கும் பட்சத்தில், எவ்வாறு நடந்து கொள்வது? இன்னொரு முறை வாருங்கள் என்று இந்தியாவால் டிரம்பிடம் சொல்ல முடியுமா?

இந்தப் புதிய யதார்த்தத்திற்கு உலகம் பழகிக் கொண்டிருக்கின்றது. டிரம்பின் விமர்சகர்கள், டிரம்பின் இந்தக் கொள்கைகள் சீனாவை மேம்படுத்தும் காரியங்கள் எனக் கணிக்கின்றன, அந்தக் விமர்சனங்களில் உண்மை இல்லாமலும் இல்லை. அவருடைய கொள்கைகள் எதிர்ப்பாரத வகையில், அசாதாரண விளைவுகளை ஏற்படுத்தக் கூடியன. தாயகத்துக்கு அண்மையில், இந்தியா-சீனா பதட்டங்கள் மெதுவாகத் தணிவதையும், ரஷ்யா-இந்தியா-சீனா (RIC) என்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது பற்றிய கருத்துக்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ஒவ்வொரு நாடும் ‘டிரம்பின் அமெரிக்காவுடன்’ தன் செல்வாக்கை எவ்வாறு உயர்த்திக் கொள்வது என்ற நேக்கத்தில் இருக்கின்றது. போரால் பாதிக்கப்பட்டு சீர்குலைந்த காங்கோ ஜனநாயகக் குடியரசு டிரம்பை எப்படிக் கையாள்வது என்பதைக் காட்டிவிட்டது. இந்தியா தன்னைத் தானே கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும்.

உலகம் புரிந்துகொண்ட இரண்டு உண்மைகள். டிரம்ப், குழப்பமான கொள்கைகளைக் கொண்ட, எதிர்வுகூறல்களுக்கு அப்பாற்பட்ட விதண்டாவாதி. இரண்டாவது, அவர் நிரந்தரமாக அங்கே இருக்கப் போவதில்லை. அதிகபட்சம், 2026 இறுதிகளில் அவர் வெளியேறூம் தருவாயில் இருப்பார், மிஞ்சிப்போனால் 2028 வரை அவரை எதிர்பார்க்கலாம். இவற்றைத் தாண்டி, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மூன்றாவது விடயம், அவரது கொள்கைகளைவிட, அனுகுமுறைகளே சீர்குலைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆகவே, அடுத்த சில ஆண்டுகளுக்கு, சேம பானம் அருந்தி, ‘டிரம்ப்லோமசியின்’ சந்தோஷ தருணங்களை அனுபவிப்பதே சிறந்த செயல்.

(மொழிபெயர்த்தவர் சுபத்ரா)

தொடர்புடைய கட்டுரைகள்