scorecardresearch
Monday, 15 December, 2025
முகப்புஉலகம்பில்வால் பூட்டோவா சசி தரூரா? மேற்கத்திய நாடுகளுடனான தொடர்புகளை விஸ்தரிப்பதில் முன்னிலை வகிப்பவர் யார் என்று...

பில்வால் பூட்டோவா சசி தரூரா? மேற்கத்திய நாடுகளுடனான தொடர்புகளை விஸ்தரிப்பதில் முன்னிலை வகிப்பவர் யார் என்று எதிர்நேக்கும் பாகிஸ்தானியர்கள்.

பில்வால் பூட்டோ சர்தாரி பாகிஸ்தானி வெளியுறவுத் தொடர்புகளை தலைமைத்தாங்குகின்றார், அவரது ஆங்கில மொழிப்புலமையில் பாகிஸ்தானியர்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

புது தில்லி: சிந்தூர் பதிலடியைத் தொடர்ந்து, இந்தியாவின் உலகலாவிய ராஜதந்திர உறவுகளுக்கு போட்டியாக, பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையில் மேற்கத்திய தலைநகரங்களுடன் உறவைப் பலப்படுத்தும் எண்ணத்தில், பாகிஸ்தான் ஒரு உயர்மட்டக் குழுவை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாகிஸ்தானியர்களை பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்களுக்கு சர்தாரியின் ஆங்கிலப் புலமையில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். சில ஆர்வலர்கள், முற்றுமுழுதாக ஆங்கிலத்தில், சர்தாரிக்கும் தரூருக்கும் காஷ்மீர் பற்றிய விவாதத்தை நடத்தவேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர்.

சர்வதேச சமூகத்திடையேயான “இந்தியப் பிரச்சாரம்” என்று இஸ்லாமாபாத் கருதும் கோட்பாடுகளை எதிர்கொள்ளும் முகமாக, பாகிஸ்தானிய உயர்மட்டக் தூதுக்குழு லண்டன், வாஷிங்டன், பாரிஸ் மற்றும் ப்ரூசல்ஸ் ஆகிய தலைநகரங்களுக்குச் சென்று, மே 10 ஆம் திகதியன்று கட்டுப்பாட்டு எல்லையில் (எல்ஓசி) ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான தன் பக்க நியாயங்களை முன்வைக்கும் முக்கிய நோக்கத்தை கொண்டிருக்கும்.

“பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ மற்றும் இந்தியாவின் சசி தரூர் இருவருக்குமிடையே காஷ்மீர் பற்றி ஆங்கிலத்தில் விவாதப் பந்தயம்” என்று தன்னை ஒரு சுயாதீன சிந்தனையாளராக அடையாளப் படுத்திக்கொள்ளும் X பயனர் தாஹிர் மாலிக் பதிவிட்டிருக்கின்றார்.

அதுமட்டுமில்லாமல், கேலியான மீம்ஸ்களும் பதிவிடப்பட்டிருந்தன. இந்திய பத்திரிகையாளர் பர்கா தத்தை நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பத்தில், சர்தாரியின் பிரதிபலிப்பு,  “இட்னே பெகைரத் ஹோ” (நீங்கள் ஒன்றும் புரியாத ஆணவக்காரர்) என்று கூறும் பிரபலமான வீடியோ காட்சியை ஒருவர் கற்பனை செய்திருக்கின்றார்.

பாகிஸ்தானிய பிரதமர் அலுவலகத்தின் கூற்றுப்படி, இந்த ராஜதந்திர முயற்சி “இந்தியாவின் முன்னுக்குப் பின் முரனான கொள்கைகளையும், பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளையும் அம்பலப்படுத்தும்” ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும். ஒருங்கிணைந்த ஒரு முன்னணியை வெளிநாடுகளில் செயற்படுத்த வைக்கும் நோக்கமாகக் கொண்ட இந்த பணியை வழிநடத்துமாறு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், சர்தாரியை தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டிருக்கின்றர்.

இந்தக் குழுவில் பல முக்கிய அரசியல் மற்றும் இராஜதந்திர பிரமுகர்கள் உள்ளடக்கப் பட்டுள்ளனர்: டாக்டர் முசாதிக் மாலிக் (காலநிலை மாற்ற அமைச்சர்), குர்ராம் தஸ்த்கீர் கான் (முன்னாள் வெளியுறவு அமைச்சர்), செனட்டர் ஷெர்ரி ரெஹ்மான், ஹினா ரப்பானி கர் (முன்னாள் வெளியுறவு அமைச்சர்), பைசல் சுப்ஸ்வரி (அரசியல்வாதி), தெஹ்மினா ஜான்ஜுவா (முன்னாள் வெளியுறவு செயலாளர்), மற்றும் ஜலீல் அப்பாஸ் ஜிலானி (முன்னாள் தற்காலிக வெளியுறவு அமைச்சர்).

எக்காள முழக்கங்கள் இருந்தபோதிலும், இஸ்லாமாபாத்தின் இந்த இராஜதந்திர ஒத்திசைவு குறித்து கேள்விகள் தொடர்கின்றன. “சிந்து வெளியில் நீரோடும், இல்லையேல் அவர்களின் குருதி பாயும்” என்று அவர் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, கூறிய அறிக்கை உட்பட, முன்னர் கூறிய பல தடித்த கருத்துக்களுக்காக சர்தாரி விமர்சனங்களை எதிர்கொண்டார். இதனால், பின்னர் அவர் அந்தக் கருத்தை புறந்தள்ளி, அமைதியைத் தொடர விரும்பும் பாகிஸ்தான் என்ற கருத்தை மையமாகக் கொண்டார்.

வெள்ளிக்கிழமை, பிரதமர் ஷெரீப், இந்தியாவுடன் சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என்ற ஆறுதலான ஒரு விடயத்தை வலியுறுத்தி பேசியுள்ளார். “நாம் நிரந்தரமான அயலவர்கள், இதுவரை மூன்று போர்கள் மூண்டிருந்த போதும், அந்த போர்கள் எந்த தீர்வுக்கும் வழி சமைக்கவில்லை… இதில் கற்க வேண்டிய விடயம் சமாதானத்தை விரும்பும் அண்டை நாடுகளாக நாம் பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும்” என்றூ அவர் கருத்திட்டார்.

பிலாவல் மீதான கவனம்

பாகிஸ்தானின் இந்த கருத்து, விரைவான, ஆழ்ந்த அர்த்தம் கொண்ட நுட்பமான நேரடிச் செயற்படு எனலாம். இந்த முக்கியத்துவம் வாய்ந்த இராஜ தந்திரோபாயத்தின் சர்வதேச தாக்கத்தினை அறிந்துகொள்ள இன்னும் அவகாசம் வேண்டிய போதிலும், சர்தாரி மீதான கவனம் வெளிப்படையான உண்மை.

“சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் சமாதான அத்தியாயத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் குழுவை வழிநடத்துமாறு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பிலாவல் பூட்டோ சர்தாரியை கேட்டுக் கொண்டுள்ளார். மிகச் சிறந்த தேர்வு மற்றும் முன்முயற்சி,” என்று டான் பத்திரிகையின் கட்டுரையாளர் நதீம் ஃபரூக் பராச்சா X இல் குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்களும் இதனை ஒப்புக்கொள்கின்றனர்.

“எந்தவொரு பிரிவினைவாதக் கருத்துகள் மற்றும் விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல், இந்த சாத்வீக உணர்வு வெளிப்பாடுகள், மாசற்ற ஜனநாயகத்தை நோக்கிய ஒரு சிறு முன்னேற்றம்” என்று பாக்கிஸ்தானிய தொழிலதிபர் ஷெஹ்ராம் X இல் கூறியுள்ளார்.

இருப்பினும், ஆக்ஸ்போர்டில் படித்த, சீரிய பேச்சாற்றல் மிக்க அரசியல்வாதியான சர்தாரியின் தேர்வு, ராஜதந்திர முக்கியத்துவமிக்க விடயமாக அல்லாமல் வெறும் அரசியல் நாடகமாகவே பார்க்கப் படுகின்றது. அவர்களைப் பொறுத்த மட்டில், அந்த உயர்மட்டக் குழுவின் பிரதிநிதித்துவம், ஒருபக்கச் சார்பானது என்ற முடிவுடன் இருக்கின்றனர்.

“பிரதிநிதித்துவம் அனைத்து கட்சிகளையும், மாகாணங்களும் பகிர்ந்து கொள்ளும் பிரதிநிதித்துவ அமைப்பாக இருந்திருக்க வேண்டும்” என்று பாகிஸ்தானிய X பயனர் காலித் எழுதினார்.

பாகிஸ்தான் செய்தி சேனலான சமா டிவியில் நடந்த விவாதத்தில், பேராசிரியர் மற்றும் கட்டுரையாளர் ரசூல் பக்ஷ் ரைஸ் – பேராசிரியர் ஹசன் அஸ்காரி, பத்திரிகையாளர் சல்மான் கானி, கட்டுரையாளர் குவாஜா இம்ரான் ராசா ஆகியோருடன் ஒரு குழுவில் – பிலாவலுடன் சேர்ந்து கர் மற்றும் ஜிலானி ஆகியோர் பாகிஸ்தானின் பக்கத்தை உலகிற்கு முன்வைப்பதில் ஒரு பயனுள்ள பணியைச் செய்ய முடியும் என்று கூறினார். அவர்களில் இருவர் PPP-யைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பாகிஸ்தானியர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஏன் அதிக உறுப்பினர்கள் உள்ளனர் என்பதில் கவனம் செலுத்தக்கூடாது என்றும் அவர் வாதிட்டார்.

“அவர் மிகவும் திறமையானவர், அதே போல் காரும் திறமையானவரே. எந்தக் கட்சிக்கு அதிக பிரதிநிதிகள் இருக்க முடியும் என்பது பற்றிய விவாதத்தை விட, பாகிஸ்தானின் தரப்பைப் பற்றிப் பேசக்கூடிய பேச்சாளர்கள் இருப்பது மிகவும் முக்கியம்,” என்று அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய கட்டுரைகள்