scorecardresearch
Monday, 15 September, 2025
முகப்புஉலகம்பாகிஸ்தானின் ஜான் எலியா ஒரு கவிஞர் மட்டும் அல்ல, அவர் ஒரு நாத்திகர், மார்க்சிஸ்ட்...

பாகிஸ்தானின் ஜான் எலியா ஒரு கவிஞர் மட்டும் அல்ல, அவர் ஒரு நாத்திகர், மார்க்சிஸ்ட் மற்றும் தத்துவவாதி

ஜான் எலியாவின் கலாச்சார தாக்கம் அவரது மரணத்திற்குப் பிறகுதான் வளர்ந்துள்ளது. பாரம்பரிய உருது கவிதைகளின் கருத்துக்களை சவால் செய்த நபராக விமர்சகர்களும் கவிதை ஆர்வலர்களும் அவரைப் பார்க்கிறார்கள்.

2002 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ஜான் எலியாவின் மரணதிற்கு பின்னரே உலகம்  அவரது கவிதைகளைக் காதலிக்க தொடங்கியது. இன்று, அவர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கவிஞர்களில் ஒருவராக இருக்கிறார், ஆனால் இன்னும் நவீன உருது கவிதைகளில் ஒரு புதிரான நபராக பார்க்கபடுகிறார் -அவர் ஒரு பாகிஸ்தான் மார்க்சிஸ்ட், ஒரு நாத்திகர் எல்லாவற்றிற்கும் மேலாக-வழக்கமான நிலை முறையை சவால் செய்தவர்.

அவரது கவிதைகள் அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தாலும், எலியா சில சமயங்களில் சோகமான கவிஞராக நிராகரிக்கப்படுகிறார். அவரது கவிதை நேர்மையானது மற்றும் உணர்ச்சிபூர்வமானது, மேலும் அன்பும் துக்கமும் அவரது எழுத்தில் முக்கியக் கருப்பொருள்கள். ஆயினும்கூட, அவர்கள் ஒரு பன்முகத்தன்மை கொண்ட, கவிஞரின் மேற்பரப்பை மட்டுமே பார்க்கிறார்கள், அவரது வாழ்க்கை அரசியல் நடவடிக்கை மற்றும் அறிவுசார் கிளர்ச்சியால் வகைப்படுத்தப்பட்டது. 

“ஜான் எலியா, என்னை பொறுதவரை, மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர். மனைவியைப் பிரிந்த பிறகு பைத்தியம் பிடித்த ஒரு ‘இதயம் உடைந்த கவிஞராக’ அவர் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறார்,” என்று இந்திய வரலாற்றாசிரியர் சாகிப் சலீம் திபிரிண்டிடம் கூறினார். முஷைராஸில் (கவிதைக் கருத்தரங்குகள்) எலியா கவிதை வாசிப்பதைக் காட்டும் யூடியூப் வீடியோக்கள் இந்த ஸ்டீரியோடைபை  மேலும் உறுதிப்படுத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார். “ஆனால் நாம் ஜான் எலியாவை ஒரு சிந்தனையாளர், தத்துவவாதி, அரசியல் வர்ணனையாளர் மற்றும் சோசலிஸ்ட் என்று மறு மதிப்பீடு செய்வது முக்கியம்.”

அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒரு உறுதியான மார்க்சிஸ்ட் என்ற எலியாவின் உண்மையான அடையாளத்தை இந்த ஒரு பரிமாண தன்மை சிதைப்பதாக சலீம் வாதிட்டார். ஆன்லைனில் அவரைப் பின்தொடர்பவர்கள் லட்சக்கணக்கானோர் மற்றும் தங்களை அடுத்த எலியாவாகக் கருதும் இளம் கவிஞர்கள் பெரும்பாலும் ஒரு முக்கிய உண்மையைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்.

“அவரது எழுத்துக்கள் (கவிதைகள் மற்றும் உரைநடை) கம்யூனிச செய்திகளால் நிறைந்துள்ளன” என்று சலீம் கூறினார்.  

கிளர்ச்சி கவிஞர் 

பல விமர்சகர்களும் கவிதை ஆர்வலர்களும் எலியாவை பாரம்பரிய உருது கவிதைகளின் கருத்துக்களை சவால் செய்த ஒருவராக பார்க்கிறார்கள்.

“நான் எலியாவின் கவிதைகளுடன் வளர்ந்தேன். இளம் வயதிலிருந்தே மனித உணர்ச்சியின் பாதிப்புகளையும், வடிகட்டப்படாத அம்சங்களையும் தழுவிக்கொள்ள இது எனக்குக் கற்றுக் கொடுத்தது ” என்று கவிஞரும் பாகிஸ்தானில் எலியாவின் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழிபெயர்ப்பாளருமான அம்மர் அஜீஸ் கூறினார்.

“ஆங்கில கஜல்களை உருவாக்குவதற்கான எனது அணுகுமுறை அவரது அந்நியப்படுதல் பற்றிய கருத்துக்களாலும், இருத்தலியல் வேறுபாட்டால் நான் குறிப்பிடுவதனாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.”

ஜான் எலியாவின் முதல் கவிதைத் தொகுப்பு, ஷயாத் (ஒருவேளை), 1991 இல் தான்  வெளியிடப்பட்டது. அதன் வெளியீட்டில் தாமதம் இருந்தபோதிலும், இந்தத் தொகுப்பு அவரைப் பிரபலமாக்கியது, குறிப்பாக பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் உள்ள முஷைராக்களில். இந்த தாமதமான அங்கீகாரம், அவர் ஏன் முதன்மையாக முஷைராஸின் கவிஞராகக் காணப்பட்டார் என்பதை விளக்கலாம், இது அவரது இலக்கிய பங்களிப்புகளை மறைத்த ஒரு முத்திரை.

எலியாவுக்கு அஞ்சலி செலுத்திய பாகிஸ்தான் மொழிபெயர்ப்பாளர் ராசா நயீம், இலக்கிய விமர்சகர்கள் கூட அவரது படைப்புகளுக்கு தகுதியான அங்கீகாரத்தை வழங்க நீண்ட காலமாக புறக்கணித்ததாக கூறினார். இருப்பினும், முஷைராக்களில் அவரது தோற்றத்தால் பார்வையாளர்கள் மயங்கினர், அங்கு அவர் அடிக்கடி வியத்தகு செயல்களை  நிகழ்த்தினார்.

அவரது கலாச்சார தாக்கம் காலப்போக்கில் வளர்ந்துள்ளது, எல்லையின் இருபுறமும் உள்ள மக்கள் எலியாவின் படைப்புகளை மேற்கோள் காட்டுவது வழக்கமல்ல. இந்த ஆண்டு ஆகஸ்டில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சீட்டு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து எலியாவின் கவிதைகள் மூலம் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.  

“வஃபா, இக்லாஸ், குர்பானி, மொஹபத், அபி இன் லாஃப்சூ கா பீச்சா கியூ கரே ஹம் (விசுவாசம், நேர்மை, தியாகம், அன்பு, இந்த வார்த்தைகளை இப்போது ஏன் யாரேனும் துரத்த வேண்டும்?)” என்று எலியாவின் கவிதை ஒன்றில் இருந்து, பிடிபியின் முன்னாள் எம்எல்ஏ அய்ஜாஸ் அஹ்மத் மிர், X இல் எழுதினார்.

குழப்பத்தில் வாழ்க்கை

ஜான் எலியா “கராச்சிவாசியாக” இருந்ததற்கு முன்பு  உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் வசித்து வந்தார். பிரிவினைக்குப் பிறகு, 1931 ஆம் ஆண்டில் சையத் சிப்த்-இ-அஸ்கர் நக்வியாக  பிறந்த எலியா, பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து தனது தந்தையின் கடைசி பெயரை ஏற்றுக்கொண்டார். அவரது சகோதரர்களான சையத் முகமது தாகி மற்றும் ரைஸ் அம்ரோவி ஆகியோரும் இலக்கிய உலகில் புகழ்பெற்ற கல்வியாளர்களாக இருந்தனர்.  

எலியா ஆரம்பத்தில் பிரிவினையை எதிர்த்தார், ஆனால் இறுதியில் 1957 இல் கராச்சிக்கு இடம்பெயர்ந்தார், அங்கு அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பத்திரிகையாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

அவரது சமகாலத்தவர்கள் பலர் பாகிஸ்தானின் அடையாளத்தை இஸ்லாமிய நாடாக ஏற்றுக்கொண்டாலும், எலியாவின் மார்க்சிச சார்புகள் அவரை நாட்டின் கருத்தியல் அடித்தளத்தில் ஏமாற்றமடையச் செய்தது. “பாகிஸ்தான் இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் கம்யூனிஸ்ட் கட்சி அதன் கோரிக்கையை ஆதரித்திருக்காது” என்று அவர் ஷயாதில் எழுதினார்.

அவரது கவிதைகளில் ஒன்றில், சர்ஜமீன்-இ-க்வாப்-ஓ-கயால் (கனவுகள் மற்றும் கற்பனையின் நிலம்) எலியா கம்யூனிஸ்ட் கொள்கைகள் மூலம் பாகிஸ்தானை மறுவடிவமைக்கும் ஒரு புரட்சியை கற்பனை செய்கிறார். “குஷ் பதான்! பேரஹான் ஹோ சுர்க் தேரா, தில்பாரா! பாங்க்பன் ஹோ சுர்க் தேரா “. (அழகி! உங்கள் ஆடைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று நம்புகிறேன், அன்பே! உங்கள் இளமைப் பருவம் சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று நம்புகிறேன்) 

இருப்பினும், எலியாவின் கவிதை குரல் சரணடையவில்லை. மாறாக, அவரது கவிதைகள் விரக்தியில் கூட, புதிய அர்த்தங்களுக்கான இடைவிடாத தேடலை வெளிப்படுத்துகின்றன. இதனால்தான் பலர் அவரை ‘எங்களை வென்ற தோல்வியாளர்’ என்று கருதினர். 

எலியா தனது அரசியல் செயல்பாடு மற்றும் சவாலான கல்வி முயற்சிகள் இருந்தபோதிலும் ஒரு குழப்பமான தனிப்பட்ட வாழ்க்கையை கொண்டிருந்தார். இழப்பு மற்றும் அந்நியப்படுதல் அவரது கலையில் முக்கிய கருப்பொருள்களாக இருந்தன, மேலும் 1992 ஆம் ஆண்டு நன்கு அறியப்பட்ட பெண்ணியவாதி ஜாஹிடா ஹினாவிடமிருந்து அவர் விவாகரத்து செய்ததால் இந்த கருத்துக்கள் மேலும் வளர்ந்தன.

2021 ஆம் ஆண்டில், அவரது மகள் ஃபைனானா ஃபர்னாம் தனது குழந்தைப் பருவம் மற்றும் அவரது தந்தையின் குடிப்பழக்கம் குறித்து தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனில் எழுதினார்.

“ஜான் எலியா தங்களுக்கு மிகவும் பிடித்த கவிஞர் என்றாலும், அவர் என் தந்தை என்பதை மக்கள் எப்படி ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை என்று எனக்கு புரியவில்லை. அவரது வசனங்களில் என்னால் உயிரைத் தேட முடியவில்லை, அவர்தான் என் வாழ்க்கை. எங்களுக்கு எங்கள் தந்தை ஜான் எலியா தேவைப்பட்டார், கவிஞர் அல்ல, எங்கள் தந்தை எங்கோ தொலைந்துவிட்டார் “என்று அவர் எழுதினார். 

தொடர்புடைய கட்டுரைகள்